நாட்டியாஞ்சலி

நாட்டியாஞ்சலி என்பது 1968 ஆம் ஆண்டு ஸ்ரீ வி. பி. தனஞ்சனன் சிர்கா இயக்கிய பாரதநாட்டியக் கலவையாகும். இது இராக மாலிகை, தாள மாலிகை, மற்றும் விநாயகர், சரஸ்வதி, விஷ்ணு, சிவன் ஆகிய தெய்வங்களைப் பற்றிய சமஸ்கிருத ஸ்லோகங்களில், வெவ்வேறு தாளங்கள் மற்றும் இராகங்களில் புகழும்வகையில் நிகழ்த்தப்படுகிறது.

சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழா

பொதுவாக நாட்டியாஞ்சலி என்பது சிதம்பரம் நடராசர் கோயிலில் நடக்கும் நடனத் திருவிழாவைக் குறிக்கிறது.[1] 40 ஆண்டுகளுக்கு முன்னர் கர்நாடக இசை நிகழ்ச்சிகள் 1000 கால் மண்டபத்தில் தினசரி நடத்தப்பட்டு வந்தது. இசை அறிஞர்களான சிதம்பரம் ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், ஷேக் சின்ன மௌலானா போன்றோர் தாங்களாகவே வந்து தைப்பூசம் வரை ஒவ்வொரு நாளும் தங்கள் இசைப் பணியை செய்துள்ளனர்.

நாட்டியாஞ்சலி என்பது ஒவொவொரு ஆண்டும் சிவராத்திரி திருவிழா அன்று செவ்வியல் நடனமான பரதநாட்டியம் ஆடும் விழா ஆகும்.[2] இது சிதம்பரம் கோவிலில் அறிமுகப்படுத்தப்பட்டது என்றாலும், இது இப்போதெல்லாம் கும்பகோணம், தஞ்சாவூர், சென்னை, நாகப்பட்டினம், மாயாவரம், திருநள்ளாறு, திருவானைகோயில் போன்ற பல கோயில்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மும்பையின், செம்பூர், செதநகர் ஸ்ரீ சுப்ரமணியா சமாஜம் கடந்த சில ஆண்டுகளாக மகாசிவராத்திரின்போது தங்கள் கோவில் வளாகத்தில் நாட்டியாஞ்சலியை நடத்தியது. நடன திருவிழா ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்கிறது, அனைத்து பாணியிலான நடனங்களும் நடராஜரின் முன்னிநிலையில் தங்கள் கலைகளை சமர்பித்து வருகின்றனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழா நிறைவு". செய்தி. தினமணி. பார்க்கப்பட்ட நாள் 3 ஆகத்து 2017.
  2. "சிதம்பரம் நடராஜர் கோயிலில் பிப்.24-இல் நாட்டியாஞ்சலி விழா". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 3 ஆகத்து 2017.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாட்டியாஞ்சலி&oldid=3313717" இலிருந்து மீள்விக்கப்பட்டது