நாட்டு நீல அழகி

பூச்சி இனம்
நாட்டு நீல அழகி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
G. doson
இருசொற் பெயரீடு
Graphium doson
C&R Felder, 1864

நாட்டு நீல அழகி (Graphium doson) வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படும் கருப்புநிற அழகிவகை பட்டாம்பூச்சி ஆகும்.

தோற்றம் தொகு

இப்பூச்சிகள் 70 மிமீ முதல் 80 மிமீ வரை இருக்கும். உடலில் நீண்ட வெள்ளைக்கோடுகளைக் காணலாம். முன்னிறக்கைகளும் பின்னிறக்கைகளும் மேற்புறத்தில் கருப்பாக இருக்கும். நடுவில் வெளிர்நீலத்தில் சற்றே ஒளியூடுருவும் வகையிலான பட்டைத்திட்டுக்களும், நுனிகளில் வரிசையாக சிறு சிறு வெளிர்நீலப்புள்ளிகளும் காணப்படும். இறக்கைகளின் கீழ்ப்புறத்தில் மேல்புறத்தைப்போலவே குறிகள் இருக்கும். கூடுதலாக வெள்ளை நிறத்திலும் சிவப்பு நிறத்திலும் புள்ளிகள் இருக்கும். பின்னிறக்கைகளின் நுனி நீண்டிருக்கும். ஆணும் பெண்ணும் ஒரேபோல் இருக்கும்.

பரம்பல் தொகு

இது தென்கிழக்காசியா நெடுகிலும் பரவலாகக் காணப்படும் பட்டாம்பூச்சியாகும். அத்துடன் இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் தாழ்வான பகுதிகளில் காணப்படும். தவிர கிழக்குத்தொடர்ச்சி மலைகள், சாத்துப்புரா, மேற்கு வங்கம், அசாம், வங்க தேசம், இமய மலை அடிவாரம் ஆகிய இடங்களிலும் காணப்படும். சப்பானின் தெற்கு ஒன்ஃசூ பகுதிகளில் அரிதாகக் காணலாம்.

வாழிடம் தொகு

தாழ்வான மலைப்பாங்கான காடுகள், அடர்காடுகள், ஆற்றுப்படுகைக்காடுகள், இலையுதிர் காடுகள், பசுமைக்காடுகள் போன்ற இடங்களில் தென்படும்.

நடத்தை தொகு

நாட்டு நீல அழகிகள் பகல்முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கும். தொடர்ந்து நகர்ந்துகொண்டே இருக்கும். மார்ச்சு முதல் திசம்பர் வரை மிகுதியாகக் காணப்படும். விரைந்து பறக்கும். பொதுவாக இறக்கைகளை மடித்துப் படபடவென்று அடித்துக்கொண்டே மலர்களில் இருந்து தேனுறிஞ்சும். ஆண்பூச்சிகள் தனித்தோ கூட்டமாகவோ சேற்றில் உறிஞ்சும்.

உள்ளினங்கள் தொகு

  • G. d. doson
  • G. d. robinson

வாழ்க்கைப்பருவங்கள் தொகு

முட்டை தொகு

வெளிர்மஞ்சள் நிறத்தில் உருண்டையாக இருக்கும் முட்டைகளை இலைகளின் அடியில் காணலாம்.

கம்பளிப்புழு தொகு

கம்பளிப்புழு சற்றே நூற்புக் கதிர் வடிவில் இருக்கும். வளர்ந்த கம்பளிப்புழுக்கள் அடர்பழுப்பாகவோ புல்பச்சை நிறத்திலோ இருக்கும். நான்காம் உடற்பகுதியில் சிறிய, கூம்புவடிவ முட்கள் இருக்கும். நடுவில் நீலநிறத்திலும் சிற்றிலும் எலுமிச்சை நிறத்திலும் கருப்பு வளையங்களுடன் காணப்படும்.

கூட்டுப்புழு தொகு

கூட்டுப்புழு வெளிர் பச்சையாக இருக்கும். தலையிலிருந்து தொண்டைப்பகுதிவரை செவ்வூதா நிறத்தில் கோடும் அதன்கீழே மஞ்சள்நிறத்தில் கோடும் இருக்கும்.

உணவுச்செடிகள் தொகு

இலவங்கப்பட்டை மரம் (Cinnamomum verum), செண்பகம் (Magnolia champaca), கொத்துகளா (Miliusa tomentosa), நெட்டிலிங்கம் (Polyalthia longifolia) போன்றவற்றின் இலைகளை கம்பளிப்புழுக்கள் உண்டு வாழும்.

மேற்கோள்கள் தொகு

  • முனைவர் பானுமதி (2015). வண்ணத்துப்பூச்சிகள்: அறிமுகக் கையேடு. சென்னை: கிரியா. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789382394136.
  • Evans, W.H. (1932) The Identification of Indian Butterflies. (2nd Ed), Bombay Natural History Society, Mumbai, India
  • Kunte,Krushnamegh (2005) Butterflies of Peninsular India. Universities Press.
  • Wynter-Blyth, M.A. (1957) Butterflies of the Indian Region, Bombay Natural History Society, Mumbai, India.

படங்கள் தொகு

இவற்றையும் பார்க்கவும் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Graphium doson
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாட்டு_நீல_அழகி&oldid=2938245" இலிருந்து மீள்விக்கப்பட்டது