நாநாவதி கொலை வழக்கு
"கே.எம்.நாநாவதி எதிர் மகாராட்டிர அரசாங்கம்" என்பது 1959ல் பாம்பே உயர்நீதிமன்றத்தில் காவஸ் மானக்சா நாநாவதி தன் மனைவி சில்வியாவின் காதலின் என கருதப் பட்ட ப்ரேம் அஹூஜாவை சுட்டுக் கொன்றார் என்ற காரணம் காட்டி பதவி செய்யப் பட்ட வழக்காகும். அது இந்திய பத்திரிக்கைகள், மற்றும் மக்களிடையே பெரும் பரபரப்பை எற்றி உலுக்கியது. பல புத்தகங்களுக்கும் சினிமாக்களுக்கும் ஏதுவாகியது. இவ்வழக்கு இந்தியாவிலேயே நடுவர் குழு முறையில் (jury system) கடைசி முறையில் எடுக்க வழக்காகும். இந்த வழக்குதான் இந்திய நீதி மன்றங்களில் நடுவர் குழு ஒழிப்பிற்கும் காரணமாயிற்று.
கொலை பின்னணி
தொகுகாவஸ் மானக்ஷா நாநாவதி (1935-2003) என்ற ஒரு பாரசி, இந்திய கடற்படையில் தளபதி (commander) ஆகவிருந்து , மும்பையில் மனைவி சில்வியா (1931- ) மற்றும் 2 பிள்ளைகள், ஒரு பெண்ணுடம் வசித்து வந்தார். நாநாவதி கப்பலில் நெடு நாட்கள் இருந்ததால், தனிமையாக இருந்த சில்வியா நாநாவதியின் நண்பர் ப்ரேம் அஹூஜாவிடன் மனம் பறி கொண்டதாக தெரிகிறது
ஏப்ரல் 27, 1959 அன்று, நாநாவதி கடலிலிருந்து வந்த நாநாவதி சில்வியா மனக்கிலேசத்தில் இருந்ததை பார்த்து, அவளை கேள்வி கேட்டு துளைப்ப, அவள் அஹூஜாவின் மேல் தன் காதலை ஒத்துக் கொண்டாள். நாநாவதி தன் குடும்பத்தை மெட்ரோ சினிமா தியேடர் பக்கம் இரைக்கி வைத்து, தான் சினிமாவை பார்க்காமல் நேரே அஹூஜாவை பார்க்க சென்றார். அஹூஜா விட்டில், அஹூஜா சில்வியாவை மணம் செய்து கொண்டு தன் மாக்களை வளர்த்து வரும் எண்ணம் உள்ளதா என கேட்டார். அதை அஹூஜா மறுத்தவுடன், 3 கைதுப்பாக்கி ரவைகள் வெடித்தன, அஹூஜா செத்து கீழே விழுந்தார். நாநாவதி நேரே தன் கடற்படை உயர் அதிகாரியிடம் சென்று நடந்ததை கூறினார். அவ்வதிகாரிகாயின் ஆலோசனையில், போலீஸ் டெபுடி கமிஷனரிடம் சரணடைந்தார். நாநாவதி போலீஸ் இலாகா இந்திய தண்டனை விதி பகுதி 1, 301, 302 களின் படி கொலை செய்தவர் என கருதப் படுபவர் என வழக்கு போட்டது.
நடுவர்குழு விசாரணை
தொகுவழக்கின் சூட்சுமம் என்னவென்றால் துப்பாக்கி எதேச்சையாக சுட்டதா அல்லது அதை குறியாக வைத்து துப்பாக்கி சுட்டாரா என்பது. முதல் விபாடையில் இந்திய தண்டனை விதிகளின் படி விசாரணை செய்து கொலை வரம்பில் வராத மரணம் விளைத்த குற்றம் என கருதி அதிக பட்சத்தில் 10 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும். இரண்டாவது விபாடையின் படி கொலையாக கருதப் பட்டு மரண தண்டனையோ ஆயுள் தண்டனையோ கிடைக்கும்.. நாநாவதி குற்றத்தை ஏற்கவில்லை என்றார். நடுவர்குழு விசாரணையில் 8-1 கணக்கில், அவர் குற்றம் செய்யவில்லை என தீர்மானம் ஆகியது.
ஆனால் செஷன்ஸ் நீதிபதி, இந்த தீர்மானத்தை கடுமையாக தண்டித்தார். அவர் வழக்கு தலைமை தாங்கிய நீதிபதி நடுவர்குழுவிற்கு சரியான திசை கொடுக்கவில்லை; அதாவது துப்பாக்கி எதேச்சையாகத்தான் சுட்டது, மன சித்ததினால் ஏற்படவில்லை என நிரூபிப்பது நாநாவதியின் பொறுப்பாகும், இவ்வாறு நீதிபதி நடுவர்களுக்கு தெளிவாகாவில்லை. மேலும், நடுவர்களுக்கு நாநாவதியின் பிரதிவாதம் நிரூபிக்கவேண்டும் என ஜட்ஜ் ஆணையிடவில்லை. செஷன்ஸ் நீதிபதியின் வாதத்தை பாம்பே உயர்நீதி மன்றம் ஏற்றுக் கொண்டு, நாநாவதி வழக்கு மறுபடியும் தொடங்கியது. மேலும், நடுவர்குழு மக்கள் ஊடங்களினால் எளிதாக சாய்கிறது என கருதப் பட்டு, அதும் ஒழிக்கப் பட்டது.
பம்பாய் உயர்நீதி மன்றம் போலீஸ் வாதமாகிய திட்டமிட்டு செய்யப் பட்ட கொலை என்பதை ஒப்புக் கொண்டு, நாநாவதிக்கு ஆயுள்தண்டனை அளித்தது. 1961 இந்திய உச்ச நீதி மன்றம் உயர்நீதி மன்ரத்தின் தீர்வை மறுமொழித்தது.
3 வருடம் சிறை வாசம் பின், நாநாவதி விடுவிக்கப் பட்டார். விடுதலைக்கு பின், தன் மனைவி சில்வியா, குழந்தைகளோடு கனடாவிற்கு புலம் பெயர்ந்தார்; 2003 உயிரிழுந்தார்.
நாநாவதி வழக்கும் பொது மக்களும்
தொகுபொது மக்களிடயே இது பெரும் மர்மத்தையும், பரபரப்பையும், ஏற்படுத்தியது. வழக்கு நடக்கும் போது, பிளிட்ஸ் போன்ற ஊடகங்கள் நாநாவதியை ஆதரித்து, அவரை விடுதலை செய்யும் படி கோரின. வழக்கின் போது, 25 பைசாவிற்கு விற்கும் பிளீட்ஸ் 2 ரூபாய்க்கு விற்றது. தெருக் கடைகளில் சிறுவர்களுக்கு 'நாநாவதி கைத்துப்பாக்கியும்', பெரியர்வர்களுக்கு 'அஹூஜா டவல்'களும் உற்பத்தியாய் விற்றன. காதலன் கொலைக்குப் பின், கணவனை முனு மனதுடன் ஆதரவு தந்த சில்வியாவின் போக்கினால், பொதுஜனம் கிளுகிளுப்பு ஏறியது. கடந்த 40 வருடங்களில் பல புத்தகங்களும், சினிமாக்கலும் எடுக்கப்பட்டன. 1963ல். தயாரிப்பாளர் நய்யாரின் 'யே ராஸ்தே ஹை ப்யார் கே' (காதலின் வழி இதுதான்), 1973ல் குல்சரின் 'அசானக்', நாநாவதி கொலை வழக்கை நாடகமாகின.
வெளி இணைப்புகள்
தொகு- எப்படி நாநாவதி விடுதலையானார் என கிசுகிசு பரணிடப்பட்டது 2007-01-01 at the வந்தவழி இயந்திரம்
- பாரத நீதித்துறை ஆவணங்கள் பரணிடப்பட்டது 2007-03-14 at the வந்தவழி இயந்திரம்
- நாநாவதியைப் பற்றி பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம்
- வழக்கைப் பற்றி ஆய்வு பரணிடப்பட்டது 2006-10-10 at the வந்தவழி இயந்திரம்