நாந்தேட் நிலநடுக்கங்கள்
நாந்தேட் நிலநடுக்கங்கள் (Nanded earthquakes) இந்தியாவின், மகாராட்டிர மாநிலத்தின் நாந்தேட் நகரத்தில் 2006 ஆண்டு முதல் 2011 ஆண்டு வரையிலான காலகட்டங்களில், ஐநூறு முறை ஏற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.[1][2] இத்தொடர் நிலநடுக்கங்கள் வெடிச்சத்தங்களுடனும், சில நேரங்களில் இலேசான நடுக்கங்களுடன் உணரப்பட்டது. 31 மார்ச் 2007, 12 நவம்பர் 2007, 14 டிசம்பர் 2007 மற்றும் 3 மார்ச் 2011 ஆகிய நாட்களில் கடுமையான நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. ஒவ்வொரு முறையும் நில நடுக்கம் ஏற்படும் போது நாந்தேட் நகரம் தேசத்திற்கு உள்ளாயின. அதிகம் பாதிக்கப்பட்ட நாந்தேட் நகரத்தின் வடக்கு பகுதி மக்கள் வீடுகளை விட்டு, பாதுகாப்பான பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.
நாந்தேட் பகுதி, நில நடுக்க மண்டலம் 2-இல் அமைந்துள்ளது.[3] 1993 லாத்தூர் நிலநடுக்கத்தின் போது அதன் வீச்சு, 150 கிலோ மீட்டர் சுற்றளவில் அமைந்த நாந்தேட் நகரத்தில் உணரப்பட்டது. 3 மார்ச் 2011-இல், அதிகாலை 3:17 மணியளவில், நாந்தேட்டில் ஏற்பட்ட 3 ரிக்டோர் அளவிலான நிலநடுக்கத்தால், மக்கள் வீடுகளை விட்டு திறந்த வெளிகளுக்கு ஓடினர்.
31 ஆகஸ்டு 2011 அன்று அதிகாலை 3:06 மணியளவில் இரண்டு முறை நிலநடுக்க அதிர்வு ஏற்பட்டது. 7 செப்டம்பர் 2011 காலை 9:00 அளவில், மீண்டும் மாலை 4:00 அளவில் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Nanded Earthquake Swarm, 2006-08
- ↑ Nanded Earthquake Swarm, 2010
- ↑ "Seismic Zoning Map of India". Archived from the original on 2014-06-03. பார்க்கப்பட்ட நாள் 2016-07-12.