நானாதேசி வணிகர்கள்

நானாதேசி வணிகர்கள் தமிழகத்தில் சிறந்து விளங்கியிருந்த வணிகக் கணங்களில் குறிப்பிடத்தக்கவர்களாவர். வெளிநாடுகளில் சென்று வாணிபத்தில் ஈடுபடுபவர்கள் எனும் பொருளில் நானாதேசி என அழைக்கப்பட்டிருந்தனர். சோழர் ஆட்சிக் காலத்தில் இலங்கையிலும் நானாதேசி வணிகர்களின் பங்களிப்பு இருந்தமையை பொலநறுவைக்கால சாசனங்கள் சான்றுபடுத்துகின்றன. ஐந்நூற்றுவர் வணிகக் கணத்தவரும் நானாதேசி வணிகக் கணத்தவரும் ஒரு குழுவினரே எனும் கருத்தும் நிலவுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நானாதேசி_வணிகர்கள்&oldid=2449017" இருந்து மீள்விக்கப்பட்டது