நான்காம் இந்திரன்

நான்காம் இந்திரன் (Indra IV ஆட்சிக்காலம் 973-982 ), என்பவன் கடைசி இராஷ்டிரகூட மன்னனும், மேலைக் கங்கர் மன்னன் இரண்டாம் மாறசிம்மனின் மருமகனும் ஆவான். இரண்டாம் மாறசிம்மன் இராஷ்டிரகூடப் பேரரசை நிலைப்படுத்த முயன்றும் அது வீணாய்ப் போனது. இராஷ்டிரகூட மரபு வரலாற்றிலிருந்து மறைந்து போனது. எனினும், இராஷ்டிரகூட மரபுடன் தொடர்புடைய குலங்கள் இராஷ்டிரகூட பேரரசு வலிமையாக இருந்த காலகட்டத்தில் ஆட்சியை விரிவாக்கம் செய்த போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் ஆட்சிசெய்து வந்தது. இந்த மரபைச்சேர்ந்த இராஜஸ்தான் கிளைகள் போன்றவை மேலும் பல நூற்றாண்டுகள் ஆட்சி செய்தன.

மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்காம்_இந்திரன்&oldid=2487938" இலிருந்து மீள்விக்கப்பட்டது