நான்குபுரொப்பைலமோனியம் பெர்ருத்தேனேட்டு

வேதிச் சேர்மம்

நான்குபுரொப்பைலமோனியம் பெர்ருத்தேனேட்டு (Tetrapropylammonium perruthenate) N(C3H7)4RuO4 என்ற வேதிவாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். சில சந்தர்ப்பங்களில் இதை லே-கிரிப்பித் வினைப்பொருள் என்றும் டெட்ராபுரொப்பைலமோனியம் பெர்ருத்தேனேட்டு என்றும், அழைக்கிறார்கள். கரிமத் தோகுப்பு வினைகளில் இதுவொரு வினைப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. டெட்ராபுரொப்பைலமோனியம் நேர்மின் அயனியும், பெர்ருத்தேனேட்டு (RuO4−) எதிர்மின் அயனியும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. ருத்தேனியம் நான்காக்சைடு ஓர் உயர் வினைத்திறன் மிக்க ஆக்சிசனேற்றியாக செயல்படுகிறது. ஆனால் இதிலிருந்து ஓரு எலக்ட்ரான் குறைக்கப்பட்ட வழிப்பொருள் மிதமான ஆக்சிசனேற்றும் சேர்மமாக உள்ளது. ஆல்ககால்களை ஆல்டிகைடுகளாக மாற்றும் வினைக்கும் [1], முதனிலை ஆல்ககால்களை கார்பாக்சிலிக் அமிலமாக மாற்றவும் இது பயன்படுத்தப்படுகிறது. உயர் வினையூக்கி மிகுத்தல் செயற்பாட்டில் அதிக அளவில் இணை ஆக்சிசனேற்றியுடன் இருபங்கு தண்ணீர் சேர்த்து பய்ன்படுத்தப்படுகிறது. இச்சூழலில், ஆல்டிகைடு தண்ணீருடன் வினைபுரிந்து ஓரிடத்த டையால் நீரேற்று அல்லது கெமினல் டையால் ஐதரேட்டு என்ற சேர்மமாக உருவாகிறது. மீண்டும் ஒருமுறை இதை ஆக்சிசனேற்றம் செய்வதால் உருவாகும் தண்ணீர், மூலக்கூற்று தூள் சேர்ப்பதன் மூலம் நீக்கப்படுகிறது [2].

நான்குபுரொப்பைலமோனியம் பெர்ருத்தேனேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டெட்ராபுரொப்பைலமோனியம் பெர்ருத்தேனேட்டு
இனங்காட்டிகள்
114615-82-6 Y
Abbreviations TPAP
TPAPR
ChemSpider 21170134 N
InChI
  • InChI=1S/C12H28N.4O.Ru/c1-5-9-13(10-6-2,11-7-3)12-8-4;;;;;/h5-12H2,1-4H3;;;;;/q+1;;;;-1; N
    Key: NQSIKKSFBQCBSI-UHFFFAOYSA-N N
  • InChI=1/C12H28N.4O.Ru/c1-5-9-13(10-6-2,11-7-3)12-8-4;;;;;/h5-12H2,1-4H3;;;;;/q+1;;;;-1;/rC12H28N.O4Ru/c1-5-9-13(10-6-2,11-7-3)12-8-4;1-5(2,3)4/h5-12H2,1-4H3;/q+1;-1
    Key: NQSIKKSFBQCBSI-DQAXOFGLAB
யேமல் -3D படிமங்கள் Image
  • CCC[N+](CCC)(CCC)CCC.O=[Ru](=O)([O-])=O
பண்புகள்
C12H28NRuO4
வாய்ப்பாட்டு எடை 351.43 கி/மோல்
தோற்றம் பச்சை நிறத்திண்மம்
உருகுநிலை 160 °C (320 °F; 433 K) (decomposition)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

நான்குபுரொப்பைலமோனியம் பெர்ருத்தேனேட்டு மிகுந்த விலைமதிப்பு மிக்கது என்றாலும் வினையூக்கி அளவிற்கு சிறிதளவில் பயன்படுத்தப்படுகிறது. மூலக்கூற்று ஆக்சிசன் [3] அல்லது என்-மெத்தில்மார்ப்போலின் என்- ஆக்சைடு [4] போன்ற இணை ஆக்சிசனேற்றிகளை விகிதவியல் அளவுகளில் சேர்த்து வினையூக்கச் சுழற்சி பராமரிக்கப்படுகிறது.

ஆல்ககாலை ஆல்டிகைடாக ஆக்சிசனேற்றும் வினை. நான்குபுரொப்பைலமோனியம் பெர்ருத்தேனேட்டு (0.06 பங்கு), என்-மெத்தில்மார்ப்போலின் என்- ஆக்சைடு (1.7 பங்கு) இவற்றுடன் இருகுளோரோமெத்தேனில் மூலக்கூற்றுத் தூள் சேர்க்கப்பட்டுள்ளது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. Steven V. Ley; Norman, Joanne; Griffith, William P.; Marsden, Stephen P. (1994). "Tetrapropylammonium perruthenate, Pr4N+RuO4, TPAP: A catalytic oxidant for organic synthesis". Synthesis: 639–666. doi:10.1055/s-1994-25538.  (review article)
  2. Xu, Z.; Johannes, C. W.; Houri, A. F.; La, D. S.; Cogan, D. A.; Hofilena, G. E.; Hoveyda, A. H. (1997). "Applications of Zr-catalyzed carbomagnesation and Mo-catalyzed macrocyclic ring closing metathesis in asymmetric synthesis. Enantioselective total synthesis of Sch 38516 (Fluvirucin B1)". J. Am. Chem. Soc. 119: 10302–10316. doi:10.1021/ja972191k. 
  3. Lenz, Roman; Steven V. Ley (1997). "Tetra-n-propylammonium perruthenate (TPAP)-catalysed oxidations of alcohols using molecular oxygen as a co-oxidant". J. Chem. Soc., Perkin Trans. 1: 3291–3292. doi:10.1039/A707339I. 
  4. Griffith, William P.; Steven V. Ley; Whitcombe, Gwynne P.; White, Andrew D. (1987). "Preparation and use of tetra-n-butylammonium per-ruthenate (TBAP reagent) and tetra-n-propylammonium per-ruthenate (TPAP reagent) as new catalytic oxidants for alcohols". J. Chem. Soc., Chem. Commun.: 1625-1627. doi:10.1039/C39870001625. 
  5. Hadfield, John A.; McGown, Alan T.; Butler, John (2000). "A high-yielding synthesis of the naturally occurring antitumour agent irisquinone". Molecules 5: 82–88. doi:10.3390/50100082. http://www.mdpi.org/molecules/papers/50100082.pdf.