நான்கு உயர்ந்த உண்மைகள்

நான்கு உயர்ந்த உண்மைகள், கௌதம புத்தர் தனது சீடர்களுக்கு அருளியதாகும். [1]

நான்கு உயர்ந்த உண்மைகளை கௌதம புத்தர் தனது சீடர்களுக்கு எடுத்துரைத்தல்

மனிதர்கள் மனநிறைவான வாழ்க்கையை வகுத்துக் கொள்ள, புத்தர் அருளியதே நான்கு உயர்ந்த உண்மைகள் ஆகும். அவைகள்: [2]

  1. துக்கம்: பிறப்பு, நோய், முதுமை, இறப்பு மற்றும் பசி மனிதர்களால் தவிர்க்க இயலாத துன்பங்கள். மேலும் பகை, கொலை, வெகுளி, இழப்பு, மயக்கம் போன்றவைகளையும் மனிதருக்குத் துன்பத்தைத் தருபவைகள்.
  2. ஆசை / பற்று: துன்பத்துக்கான காரணம் ஆசை அல்லது பற்று.
  3. துன்பம் நீக்கல்: ஆசையை விட்டுவிடுவதுவே துன்பத்தை நீக்கும் முறைமை.
  4. எட்டு நெறிகள்: துக்கத்தைப் போக்க உதவும் எட்டு வழிமுறைகள்: நல்ல பார்வை, நல்ல எண்ணம், நல்ல பேச்சு, நல்ல நடவடிக்கை, நல்ல வாழ்வாதாரம், நல்ல நினைவாற்றல், நல்ல முயற்சி, நல்ல செறிவு

இந்த நான்கு உண்மைகளை விழிப்புணர்வுடன் அறிந்து, நன்னெறியுடன் வாழ்பவர்களை, அருகத நிலையை அடைந்தவர் என பௌத்தம் கூறுகிறது.[3] [4]

மேற்கோள்கள்

தொகு
  1. The Four Noble Truths of Buddhism
  2. The Four Noble Truths
  3. Arhat
  4. Warder 1999, ப. 67.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்கு_உயர்ந்த_உண்மைகள்&oldid=3913393" இலிருந்து மீள்விக்கப்பட்டது