நான்கு கண் மீன்

நான்கு கண் மீன்
Anableps sp.
A. anableps
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Cyprinodontiformes
குடும்பம்:
Anablepidae
பேரினம்:
Anableps

Scopoli, 1777

நான்கு கண் மீன் (four-eyed fishes) என்பது ஒருவகை மீனாகும். இது தென் மெக்சிகோ முதல் ஆண்டுராஸ் வரையும், தென்னமெரிக்காவின் வட பகுதியிலும் காணப்படுகின்றன.[1] இந்த மீனுக்கு உண்மையில் நான்கு கண்கள் கிடையாது. கண்ணில் உள்ள தசையின் அமைப்பால் நான்கு கண்கள் இருப்பது போன்ற தோற்றம் தருகின்றன. தண்ணீரின் மேல் மட்டத்தில் நீந்தும்போது கண்ணின் மேல்பாதி மேலே பார்த்துக்கொண்டிருக்கும். கீழ்பாதி கீழே பார்த்துக் கொண்டிருக்கும். இப்படிப் பார்ப்பதினால் நான்கு கண்கள் இருப்பது போலத் தோன்றுகிறது.

இயல்புகள்

தொகு

இம்மீன்கள் தமது பெருமளவு காலத்தை நீர் மேற்பரப்பில் செலவிடுகின்றன. பெரும்பாலும் நீர் மேற்பரப்பில் காணப்படும் நிலவாழ் பூச்சிகள் உணவாகக் கொள்ளுகின்றன. இவை தவிர முதுகெலும்பிலிகள், இருகலப்பாசிகள், மற்றும் சிறிய மீன் இனங்களையும் உணவாகக் கொள்ளும்.[2]

குறிப்புகள்

தொகு
  1. Nelson, Joseph, S. (2006). Fishes of the World. John Wiley & Sons, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-25031-7.
  2. Froese, Rainer and Pauly, Daniel, eds. (2007). "Anableps anableps" in FishBase. Mar 2007 version.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்கு_கண்_மீன்&oldid=2697482" இலிருந்து மீள்விக்கப்பட்டது