நான்சி பெலோசி
நான்சி பட்ரிசியா பெலோசி (Nancy Patricia Pelosi, பிறப்பு: மார்ச் 26, 1940) என்பவர் ஐக்கிய அமெரிக்க அரசியல்வாதி ஆவார். இவர் ஐக்கிய அமெரிக்க சார்பாளர்கள் அவைத்தலைவராக சனவரி 2019 முதல் பணியாற்றி வருகிறார். இவர் ஐக்கிய அமெரிக்க வரலாற்றில் இப்பொறுப்பைப் பெற்ற முதல் பெண்மணி ஆவார், மேலும் ஐ.அ. வரலாற்றில் மிக உயரிய தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் அதிகாரி ஆவார்.[1]அவைத்தலைவராக, அதிபர் பொறுப்பு வெறுமையடையும் போது, துணை அதிபருக்குப் பிறகு, பொறுப்பேற்கும் வரிசையில் பெலோசி இரண்டாவது இடத்தில் உள்ளார்.[2]
நான்சி பெலோசி | |
---|---|
52ஆவது ஐக்கிய அமெரிக்க சார்பாளர்கள் அவைத்தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் சனவரி 3, 2019 | |
முன்னையவர் | பவுல் ரியன் |
பதவியில் சனவரி 4, 2007 – சனவரி 3, 2011 | |
முன்னையவர் | டென்னிஸ் ஹாஸ்டெர்ட் |
பின்னவர் | ஜான் போனர் |
அவையின் சிறுபான்மைத் தலைவர் | |
பதவியில் சனவரி 3, 2011 – சனவரி 3, 2019 | |
Deputy | ஸ்டெனி ஹோயர் |
முன்னையவர் | ஜான் போனர் |
பின்னவர் | கெவின் மெக்கார்த்தி |
பதவியில் சனவரி 3, 2003 – சனவரி 3, 2007 | |
Deputy | ஸ்டெனி ஹோயர் |
முன்னையவர் | டிக் கெஃபார்டிட் |
பின்னவர் | ஜான் போனர் |
அவையின் மக்களாட்சிக் கட்சி உறுப்பினர்கள் குழுத்தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் சனவரி 3, 2003 | |
முன்னையவர் | டிக் கெஃபார்டிட் |
அவையின் சிறுபான்மை கொறடா | |
பதவியில் சனவரி 15, 2002 – சனவரி 3, 2003 | |
தலைவர் | டிக் கெஃபார்ட் |
முன்னையவர் | டேவிட் பொனியோர் |
பின்னவர் | ஸ்டெனி ஹோயர் |
ஐக்கிய அமெரிக்க சார்பாளர்கள் அவை உறுப்பினர் கலிஃபோர்னியா தொகுதி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் சூன் 2, 1987 | |
முன்னையவர் | சாலா பர்டன் |
தொகுதி | 5ஆவது மாவட்டம் (1987–1993) 8ஆவது மாவட்டம் (1993–2013) 12ஆவது மாவட்டம் (2013–தற்போது) |
கலிஃபோர்னிய மக்களாட்சிக் கட்சியின் தலைவர் | |
பதவியில் பெப்ரவரி 27, 1981 – ஏப்ரல் 3, 1983 | |
முன்னையவர் | சார்லஸ் மனட் |
பின்னவர் | பீட்டர் கெல்லி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | நான்சி பட்ரிசியா டிஅலெசான்ட்ரோ மார்ச்சு 26, 1940 பால்ட்டிமோர், மேரிலன்ட் |
அரசியல் கட்சி | மக்களாட்சி |
துணைவர் | பால் பெலோசி (தி. 1963) |
பிள்ளைகள் | 5 |
வாழிடம்(s) | சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா |
முன்னாள் கல்லூரி | ட்ரினிட்டி வாஷிங்டன் பல்கலைக்கழகம் (பி.ஏ.) |
கையெழுத்து | |
இணையத்தளம் | House website Speaker website |
பெலோசி முதன்முதலாக 1987இல் கீழவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தனது அவை உறுப்பினர் பதவியை 17ஆவது முறையாக 2019இல் தொடங்கினார். கலிபோர்னியாவின் 12வது பேரவை மாவட்டத்தை சார்புப்படுத்துகிறார், இது அந்நகரத்தின் நான்கில் ஐந்தில் ஒரு பகுதியையும் சான் பிரான்சிஸ்கோ மாவட்டத்தையும் கொண்டுள்ளது. இவர் தொடக்கத்தில் 5ஆவது மாவட்டத்தை (1987-1993) சார்புப்படுத்தினார், பின்னர், 1990 மக்கள்தொகை கணக்கெடுப்பின் பின்னர் மாவட்ட எல்லைகள் மீண்டும் வரையப்பட்டபோது, 8ஆவது மாவட்டத்தை (1993–2013) சார்புப்படுத்தினார். மக்களாட்சிக் கட்சியின் உறுப்பினரான பெலோசி, 2003 முதல் மக்களாட்சிக் கட்சியை அவையில் வழிநடத்தியுள்ளார். இவரே பேரவையில் ஒரு கட்சியை வழிநடத்திய முதல் பெண்மணி ஆவார். மேலும் அவையின் சிறுபான்மைத் தலைவராகவும் (2003-2007 மற்றும் 2011–2019, குடியரசுக் கட்சியினர் பெரும்பான்மையைக் கொண்டிருந்தபோது), அவைத்தலைவராகவும் (2007–2011 மற்றும் 2019-தற்போது வரை, மக்களாட்சிக் கட்சியினர் பெரும்பான்மை கொண்டிருக்கும்போது) பணியாற்றியுள்ளார்.
சான்றுகள்
தொகு- ↑ Stolberg, Sheryl Gay (January 2, 2019). "Nancy Pelosi, Icon of Female Power, Will Reclaim Role as Speaker and Seal a Place in History". The New York Times. பார்க்கப்பட்ட நாள் January 3, 2019.
- ↑ See 3 U.S.C. § 19