நான் பெண் விருதுகள்

நான் பெண் விருதுகள் (ஐ ஆம் வுமன்-I Am Woman awards) என்பது கரண் குப்தா கல்வி அறக்கட்டளை மற்றும் ஐ. இ. வணிகப் பள்ளி மூலம் பெண்களின் உத்வேகத்தைக் கொண்டாடவும் விருது வழங்கவும் உருவாக்கப்பட்ட ஒரு தளமாகும். நிகழ்ச்சியில் பெண்கள் தங்களின் தொழில்சார் மற்றும் தனிப்பட்ட சவால்கள் மற்றும் அதை எப்படிச் சமாளித்தார்கள் என்பது பற்றிப் பேசுகிறார்கள்.

நீரஜா, லக்கி மொரானி, அம்ரிதா ராய்சந்த், தேவிதா சராஃபு உள்ளிட்ட படங்களில் நடித்ததற்காக சோனம் கபூர் ஐ ஆம் வுமன் 2016ஆண்டிற்கான விருதினைப் பெற்றுள்ளார்.[1]

ஏப்ரல் 2017-இல் அம்ருதா பட்னாவிஸ், லட்சுமி அகர்வால், சிறிகௌரி சாவந்த், கரிசிகா லுல்லா, ஃபராஹ் கான் அலி, மாலினி அகர்வால் மற்றும் சாகீன் மிசுதிரி ஆகியோருக்கு பெண்கள் அதிகாரமளிப்பதற்காகச் செய்த பங்களிப்புகளுக்காக நான் பெண் விருதுகள் வழங்கப்பட்டன.[2][3][4][5][6]

2018ஆம் ஆண்டின் நான் பெண்மணியின் மூன்றாவது விருதில் சுஷ்மிதா சென், லியா டாடா, மிஷெல் பூனாவல்லா, பாவனா ஜஸ்ரா, பல்குனி பீகாக், மலிஷ்கா ஆர்ஜே, பா சிங், பிரீத்தி சீனிவாசன் மற்றும் ஜோதி தவாலே ஆகியோர் விருது பெற்றனர். இந்த நிகழ்வை அம்பர் விக்மோர் மற்றும் மதுபாலா தொகுத்து வழங்கினர்னர்.[7][8] நான் பெண் விருதுகளின் இந்த பதிப்பில், விருதுகளுக்கான பரிந்துரைகள் பொதுமக்களிடமிருந்தும் பெறப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பரிந்துரைகள் பெறப்பட்டன. மதிப்புமிக்க விருது வழங்கும் விழாவில் விருந்தினர்கள் மற்றும் பிரபலங்கள் மஹேகா மிர்பூரி, ஷீபா ஆகாஷ்தீப், ரேஷ்மா மெர்ச்சன்ட், ஃபரா கான் அலி, ஆர்த்தி மற்றும் கைலாஷ் சுரேந்திரநாத், மிரீனல் தேஷ்ராஜ், விகாஸ் பல்லா, கிரண் பாவா, அர்சூ கோவித்ரிகர், அதிதி கோவித்ரிகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.[9]

ஏப்ரல் 2019-இல், கரண் குப்தா நான் பெண்மணியின் 4வது பதிப்பைத் தொகுத்து வழங்கினார். சோனாலி பிந்த்ரே, வடிவமைப்பாளர் நீதா லுல்லா, ஜெனிசிஸ் சொகுசு நிறுவனத்தின் இணை நிறுவனர் தீபிகா கெஹானி, பிரியா குமார் (ஆசிரியர்), இன்ஃபோசிஸ் கற்றல் தலைவர் கிஷா குப்தா, வழக்கறிஞர் தீபிகா சிங் ரஜாவத் மற்றும் சமூக ஆர்வலர்கள் சிந்துதாய் சப்கல் மற்றும் நீகாரி மண்டலி ஆகியோர் வெற்றி பெற்றனர். குழு விவாதங்களுக்கு மானசி ஜோசி ராய், மானசி இசுகாட் மற்றும் நடிகர்கள் ரோஹித் ராய், பர்வின் தபாசு மற்றும் தனுஜ் விர்வானி ஆகியோர் தொகுத்து வழங்கினர். திவ்யா சேத், வித்யா மால்வடே, சந்தீப் சோபர்கர், ஆர்த்தி மற்றும் கைலாஷ் சுரேந்திரநாத் உள்ளிட்டோர் மதிப்புமிக்க விருது வழங்கும் விழாவில் விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். முந்தைய 'நான் பெண்' விருது வென்ற ரேஷ்மா மெர்ச்சன்ட், கிரண் பாவா, மஹேகா மிர்பூரி மற்றும் பாவ்னா ஜஸ்ரா ஆகியோரும் கலந்து கொண்டனர். சோனாலி பிந்த்ரே பெண்கள் பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.[10][11]

மேற்கோள்கள்

தொகு
  1. "Sonam Kapoor receives'I Am Woman' women empowerment award – www.asiatimes.com.au" (in en-US). www.asiatimes.com.au இம் மூலத்தில் இருந்து 2019-04-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190430124539/http://www.asiatimes.com.au/sonam-kapoor-receives-i-am-woman-women-empowerment-award/. 
  2. "Celebrating Women Power". timesofindia.com. Archived from the original on 2018-05-01. பார்க்கப்பட்ட நாள் 2017-05-07.
  3. "Inspring women through women". mid-day.com. Archived from the original on 2018-05-01. பார்க்கப்பட்ட நாள் 2017-05-07.
  4. "In Pics: Celebrating extraordinary women". rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2017-05-07.
  5. "Krishika Lulla, Farah Khan Ali and Amruta Fadnavis honoured with the 'I Am Woman' awards". Bollywood Hungama. பார்க்கப்பட்ட நாள் 2017-05-07.
  6. "Inspiration!". www.afternoondc.in.com. Archived from the original on 2018-05-01. பார்க்கப்பட்ட நாள் 2017-05-07.
  7. "Mumbai hosts an award ceremony that celebrates the inspiration of women". timesofindia.com. பார்க்கப்பட்ட நாள் 2018-04-30.
  8. "Celebs grace I Am Woman awards". Bollywood Hungama. பார்க்கப்பட்ட நாள் 2018-05-01.
  9. "Mumbai hosts an award ceremony that celebrates the inspiration of women". timesofindia.com. பார்க்கப்பட்ட நாள் 2018-04-30.
  10. "A celebration of women achievers". economictimes.com. பார்க்கப்பட்ட நாள் 2019-04-30.
  11. "Sonali Bendre: 'My Mother Always Said That Unless You Are Independently Earning, Do Not Get Married!'". indiawest.com. Archived from the original on 2019-04-26. பார்க்கப்பட்ட நாள் 2019-04-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்_பெண்_விருதுகள்&oldid=3902495" இலிருந்து மீள்விக்கப்பட்டது