நாமக்கல் கவிஞர் மாளிகை
நாமக்கல் கவிஞர் மாளிகை (Namakkal Kavignar Maaligai) சென்னை, புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் அமைந்துள்ள ஒரு 11-அடுக்குக் கட்டடம் ஆகும். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் இங்கு அமைந்துள்ளது.[2] கோட்டை வளாகத்தில் அமைந்துள்ள மிக உயர்ந்த கட்டடம் இதுவாகும். 2014 தரவுகளின்படி இங்கு 6,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.[3]
நாமக்கல் கவிஞர் மாளிகை | |
---|---|
பொதுவான தகவல்கள் | |
வகை | மாநில அரசு அலுவலகங்கள் |
இடம் | புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை, இந்தியா |
துவக்கம் | 1975[1] |
உரிமையாளர் | தமிழ்நாடு அரசு |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 11 |
வரலாறு
தொகு1640-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் இக்கோட்டை கட்டப்பட்டது. விடுதலைக்குப் பிறகு உள்துறை அமைச்சகம் கட்டடத்தை நிர்வகித்தது. பிறகு மாநிலத் தலைமைச் செயலகம் கோட்டை வளாகத்தில் செயல்படத் தொடங்கியது. கட்டடத்தின் மூன்றாவது அடுக்கில் முதலமைச்சர் அலுவலகம், தலைமைச் செயலர், உள்துறை அமைச்சர், கருவூலம் ஆகிய அலுவலகங்கள் இயங்கின. மீதமுள்ள துறைகளுக்கு அலுவலகங்கள் தேவைப்பட்டதால், திமுக அரசு மூன்று அடுக்கை 10 அடுக்கு வரை மாற்றியமைத்தது. இந்த 10-அடுக்குக் கட்டடம் 1975-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு வெ. இராமலிங்கம் பிள்ளை அவர்களின் நினைவாக 'நாமக்கல் கவிஞர் மாளிகை' எனப் பெயரிடப்பட்டது. இங்கு 30 துறைகளும், கலந்துரையாடல் அறையும் உள்ளது.[1]
புதுப்பித்தல்
தொகு2011-ம் ஆண்டு புதிய கட்டடம் முன்னும் பின்னும் கட்ட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. புதிய அடுக்குமாடி கட்டடம் கட்டுவதற்கு மார்ச் 3, 2012 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.[4] பழங்கால கட்டடம் நவீனத்துவம் மிக்கதாக கட்டடவியல் நிபுணர்களால் அமைக்கப்பட்டது. இதற்காக சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் அனுமதி பெறப்பட்டது.[5]
மின்சேமிப்பு விளக்குகள், மையப்படுத்தப்பட்ட காற்று சீரமைப்பி, சுகாதாரமான சுற்றுச்சூழல் மற்றும் சூரிய வெப்பம் உள்ளே வராத வண்ணம் கட்டட அறைகள் 3540 வடிவமைக்கப்பட்டது. கட்டடத்தின் மின்பகுதியில் பசுமைபுல் தரையும்,[4] செயற்கை நீரூற்றும் அமைக்கப்பட்டது.[3] கட்டடத்தை புனரமைப்பு செய்ய 145 மில்லியன் மதிப்பிடப்பட்டது, ஆனால் இறுதியில் 135 மில்லியன் செலவில் முடிக்கப்பட்டது.[3]
நவின முறையில் 29 உடற்பயிற்சி உபகரணங்களுடன் 5 மில்லியன் மதிப்பிலான உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்பட்டது.[2]
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "புதுப்பிக்கப்பட்ட நாமக்கல் கவிஞர் மாளிகை: ஜெயலலிதா நாளை திறந்து வைக்கிறார்" (in Tamil). Malai Malar (Chennai). 9 July 2014 இம் மூலத்தில் இருந்து 7 February 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150207105816/http://www.maalaimalar.com/2014/07/09082855/renewed-namakkal-kavignar-mali.html. பார்த்த நாள்: 7 February 2015.
- ↑ 2.0 2.1 Mariappan, Julie (10 July 2014). "Jayalalithaa opens renovated exterior of Namakkal Kavignar Maligai". The Times of India (Chennai: The Times Group). http://timesofindia.indiatimes.com/city/chennai/Jayalalithaa-opens-renovated-exterior-of-Namakkal-Kavignar-Maligai/articleshow/38138328.cms. பார்த்த நாள்: 7 February 2015.
- ↑ 3.0 3.1 3.2 "CM opens renovated building at Secretariat". The Hindu (Chennai). 11 July 2014. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/cm-opens-renovated-building-at-secretariat/article6199619.ece. பார்த்த நாள்: 7 February 2015.
- ↑ 4.0 4.1 "Foundation stone laid for renovation of 'Namakkal Kavignar Maaligai'". The Hindu (Chennai). 4 March 2012. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/foundation-stone-laid-for-renovation-of-namakkal-kavignar-maaligai/article2959401.ece. பார்த்த நாள்: 7 February 2015.
- ↑ "Facelift for Kavignar Maaligai". The New Indian Express (Chennai: Express Publications). 4 March 2012. http://www.newindianexpress.com/states/tamil_nadu/article340172.ece. பார்த்த நாள்: 7 February 2015.