நாரதா அருவி
நாரதா அருவி (Narada Falls) ஐக்கிய அமெரிக்காவின் வாசிங்டன் மாநிலத்தில் மவுண்ட் ரெய்னிர் தேசியப் பூங்காவில் உள்ள அருவியாகும். 188 அடி உயரமுள்ள இந்த அருவி 168 அடி மற்றும் 20 அடி கொண்ட இரு அடுக்கு நீர்வீழ்ச்சியாக நீரைப் பொழிகிறது. குளிர் காலங்களில் மேல் அடுக்கு நீர் உறைந்து பனிக்கட்டிகளாக மாறுகிறது. "நாரதா" எனும் இந்திய வார்த்தைக்கு தூய்மையான என்பது பொருள். இப்பெயர் ஆர்தர் எப்.க்னைட் (Arthur F. Knight) ஆல் பரிந்துரைக்கப்பட்டு 1893 ஆம் ஆண்டு நாரதர் அருவி எனப் பெயர் சூட்டப்பட்டது. இந்த அருவியின் முந்தையப் பெயர் குஷ்மேன் அருவி (Cushman Falls) என்பது. இது பரவலாக பயன்படுத்தப்படுவதில்லை[1]
நாரதா அருவி | |
---|---|
நாரதா அருவியின் மேலடுக்கு | |
அமைவிடம் | மவுண்ட் ரெய்னிர் நேசனல் பார்க், வாசிங்டன்,அமெரிக்கா |
மொத்த உயரம் | 188 அடிகள் (57 m) |
வீழ்ச்சி எண்ணிக்கை | 2 |
சராசரி அகலம் | 50 அடிகள் (15 m) |