நாராயண் பலேகர்

இந்திய விடுதலைப் போராட்ட வீரர்

நாராயண் பலேகர் (Narayan Palekar) கோவா விடுதலை இயக்கத்தில் பங்கேற்ற இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். இந்திய பொதுவுடமைக் கட்சியின் தலைவராகவும் இவர் செயல்பட்டார்.[1][2] அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசின் கோவா மாநில மன்றத்தின் தலைவராகவும் இருந்தார். கோவா மக்கள் கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராக இவர் பணியாற்றினார். "சனநாயகப் புரட்சிக்கு மக்களை தயார்படுத்துதல் மற்றும் கோவாவில் மக்கள் ச்னநாயகத்தை நிறுவுதல் என்ற நோக்கத்துடன் நாராயண் பலேகர், சியார்ச்சு வாசு மற்றும் எசு. ஏ. டாங்கே ஆகியோர் கோவா மக்கள் கட்சியை உருவாக்கினர். பின்னர் கோவாவில் சியார்ச்சு வாசு மற்றும் எசு. ஏ. டாங்கே ஆகியோருடன் சேர்ந்து இந்திய பொதுவுடமை கட்சியில் இவர் உறுப்பினரானார்.[3][4]

2006 ஆம் ஆண்டு சூலை மாதம் 26 ஆம் தேதியன்று நாராயண் பலேகர் காலமானார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Revisiting Goa's Liberation Story on its 59th Independence Day". NewsClick (in ஆங்கிலம்). 2020-12-18. பார்க்கப்பட்ட நாள் 2021-07-24.
  2. "50 Years of Goa Liberation" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-24.
  3. Staff (2006-07-26). "Veteran freedom fighter, communist leader Palekar passes away". Oneindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-24.{{cite web}}: CS1 maint: url-status (link)
  4. "Former Communist Leader Palekar is dead". Zee News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாராயண்_பலேகர்&oldid=3775364" இலிருந்து மீள்விக்கப்பட்டது