நாராயண் பெனிவால்

இந்திய அரசியல்வாதி

நாராயண் பெனிவால் (Narayan Beniwal) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இராசத்தான் மாநிலத்தின் நாகௌர் நகரத்தைச் சேர்ந்த இவர் , 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் கின்வாசரில் இருந்து இராசத்தான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் [1] [2] [3] இராசுரிய லோக்தந்திரிக் கட்சியின் உறுப்பினராக இருந்தார். நாராயண் பெனிவால் இராசுட்ரிய லோக்தந்திரிக் கட்சியின் நிறுவனரும் நாகௌர் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுமான் பெனிவாலின் சகோதரர் ஆவார்.

நாராயன் பெனிவால்
Narayan Beniwal
இராசத்தான் சட்டப் பேரவை
பதவியில்
24 அக்டோபர் 2019 – தற்பொழுது வரை
முன்னையவர்அனுமன் பெனிவால்
தொகுதிகின்வாசர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு11 சூலை 1975 (1975-07-11) (அகவை 48)
பாரங்காவன்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சி இராச்டிரிய லோக்தந்திரிக் கட்சி
துணைவர்
சுமேசு பெனிவால் (தி. 2000)
பிள்ளைகள்1
உறவினர்கள்அனுமன் பெனிவால் (சகோதரர்)
வாழிடம்பாரங்காவன்

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

நாராயண் பெனிவால் 1975 ஆம் ஆண்டு சூலை மாதம் 11 ஆம் தேதி இராசத்தானின் நாகௌர் மாவட்டத்தில் உள்ள பாரங்காவன் கிராமத்தில் இராம்தேவ் மற்றும் மோகினி தேவிக்கு மகனாகப் பிறந்தார். இராசத்தான் பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். 2000 ஆம் ஆண்டில் சுமேசு பெனிவால் என்பவரை மணந்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் (பிரதீக் பெனிவால்) உள்ளார்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாராயண்_பெனிவால்&oldid=3797499" இலிருந்து மீள்விக்கப்பட்டது