நாரோடாகினி

நாரோடாகினி(नारोडाकिनि) திபெத்தில் வணங்கப்படும் ஒரு டாகினி ஆவார். இவரது சித்தரிப்பு வஜ்ரயோகினியை ஒத்து காணப்படும். இவரை திபெத்திய மொழியில் நாரோ கச்சோமா என அழைக்கப்படுகிறார். பாய்வது போன்ற தோற்றம், கபாலம் ஆகியவற்றை வைத்து நாரோதாக்கினியை எளிதில் கண்டுகொள்ளலாம். இவரது முகம் மேல்நோக்கியவாறு காணப்படுகிறது. மேலும் இவரது வலது கரத்தில் குறுவாள் ஏந்தியவாறு உள்ளார். இவரது உடலியல்புகள் பௌத்த தத்துவங்களின் உருவகமாக கருதப்படுகின்றன. இவரது கரை புரண்டோடும் கூந்தல் பற்றற்ற மனம் எண்ணமில்லா நிலையில் நோக்கி செல்வதை குறிக்கிறது. இவரது மகுடத்தில் உள்ள ஐந்து மண்டை ஓடுகளும் தன்னலத்தில் ஐந்து கூறுகளை புத்தத்தின் ஐந்து விவேகங்களாக உருமாற்றுவதையும் மாலையாக அணியப்பட்டுள்ள 50 தலைகள் மொழியிலும் எண்ணத்திலும் தூய்மையை மேற்கொள்ளவேண்டிய 50 கூறுகளை குறிக்கிறது. இவருடைய எலும்பு அணிகலன்கள் புத்த நிலைக்கு தேவையான ஆறு பாரமிதங்களில்(முழுமைகள்) ஐந்தை குறிக்கிறது. இவரது உடலே ஆறாவது பாரமிதமாக கருதப்படுகிறது. வலது கரத்தில் கட்வங்கம் காணப்படுகிறது.[1][2][3]

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. A Saint in Seattle: The Life of the Tibetan Mystic Dezhung Rinpoche by David P. Jackson (2004)
  2. The World of Tibetan Buddhism: An Overview of Its Philosophy and Practice by Dalai Lama (1995) p.113
  3. Vajrayogini: Her Visualizations, Rituals, and Forms (Studies in Indian and Tibetan Buddhism) by Elizabeth English (2002)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாரோடாகினி&oldid=4100056" இலிருந்து மீள்விக்கப்பட்டது