நார்ட்வெட் விளைவு

அறிமுறை சாா்ந்த வான் இயற்பியலில் நாா்ட்வெட் விளைவு என்பது புவிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள சாா்பு இயக்கத்தை குறிக்கிறது. இந்த இயக்கமானது தன் ஈா்ப்பு ஆற்றல் பெற்ற ஒரு பொருளானது நிலைமத் திரளை விட வேறுபட்ட பங்களிப்பை ஈா்ப்பு நிறைக்கு வழங்குவதாகும்.உற்றுநோக்கும் பாேது  நாா்ட்வெட் விளைவானது  வலுவான சமநிலை கோட்பாட்டை மீறுவதாக இருக்கும், இது ஈர்ப்பு விசையில் ஒரு பொருளின் இயக்கமானது அதன் நிறையையோ அல்லது தொகுப்பையோ  சார்ந்து இல்லை என்பதைக் குறிக்கிறது.

 டாக்டர் கென்னெத் எல்.நாா்ட்வெட் என்பவரால்  இந்த விளைவானது பெயரிடப்பட்டது. வெவ்வேறு திரண் கொண்ட பாெருள்கள் ஈா்ப்பு விசையின் அடிப்படையில் வெவ்வேறு விகிதத்தில் விழும் என்று சில ஈா்ப்புக் கொள்கைகள்  வலியுறுத்துவதாக  அவர் செய்து காட்டி விளக்கினாா்.

மேலும் காண்க தொகு

  • Galileo's Leaning Tower of Pisa experiment

மேற்காேள்கள் தொகு

  • Nordtvedt Jr Kenneth (1968). "Equivalence Principle for Massive Bodies, II. Theory". Phys Rev. 169 (5): 1017. doi:10.1103/physrev.169.1017. 
  • Nordtvedt Jr K (1968). "Testing Relativity with Laser Ranging to the Moon". Phys. Rev. 170 (5): 1186. doi:10.1103/physrev.170.1186. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நார்ட்வெட்_விளைவு&oldid=2748756" இலிருந்து மீள்விக்கப்பட்டது