நார்த்துபைட்டு

கார்பனேட்டு கனிமம்

நார்த்துபைட்டு (Northupite) என்பது Na3Mg(CO3)2Cl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். பொதுவல்லாத ஓர் ஆவியாதல் படிவு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. நிறமற்றது முதல் அடர் சாம்பல் அல்லது பழுப்பு நிற எண்முகப் படிகங்களாக உலகளாவிய அளவில் இக்கனிமம் தோன்றுகிறது. செயற்கையாகத் தயாரிக்கப்படும் கனிமப்பொருளில் இது டைக்கைட்டு (Na6Mg2(CO3)4SO4) கனிமத்துடன் ஒரு தொடர் வரிசையை உருவாக்குகிறது.

நார்த்துபைட்டு
Northupite
நார்த்துபைட்டு எண்முகம்
பொதுவானாவை
வகைகார்பனேட்டு கனிமங்கள்
வேதி வாய்பாடுNa3Mg(CO3)2Cl
இனங்காணல்
படிக இயல்புஎண்முகப் படிகங்கள்; உருண்டைகள், பொதிகள்
படிக அமைப்புகனசதுரம் (படிக முறை)
முறிவுசங்குருவம்
விகுவுத் தன்மைநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை3 12 - 4
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும்
ஒப்படர்த்தி2.380–2.407
ஒளியியல் பண்புகள்ஒருபடித்தானது
ஒளிவிலகல் எண்n = 1.5144 (இரும்பு கலப்பு எனில் 1.550)
கரைதிறன்நீர்த்த அமிலங்களில் நன்கு கரைகிறது. சூடான நீரில் கரையும்போது சிதைவடந்து மக்னீசியம் கார்பனேட்டை தருகிறது.
மேற்கோள்கள்[1][2][3]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் தெர்மோனேட்ரைட்டு கனிமத்தை Nup[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

1895 ஆம் ஆண்டு கலிபோர்னியாவின் சான் பெர்னார்டினோ மாகாணத்தில் இருக்கும் சியர்லசு ஏரியில் சி. எச். நார்த்து (பிறப்பு 1861) என்பவரால் கலிபோர்னியாவின் சான் யோசிலிருந்து இக்கனிமம் கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடித்தவரின் நினைவாக அவர் பெயரே கனிமத்திற்கு நார்த்துபைட்டு என்று சூட்டப்பட்டது.

டைக்கைட்டு, பிரிசோனைட்டு கனிமங்களுடன் சியர்லெசு ஏரியிலும், சார்ட்டைட்டு, டிரோனா, பிரிசோனைட்டு, கேலூசைட்டு, லாபண்ட்சோவைட்டு, சியர்லெசைட்டு, நார்செதைட்டு, லாப்லினைட், பைரைட், குவார்ட்சு போன்ற கனிமங்களுடன் சேர்ந்து அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான வயோமிங் மாநிலத்திலும் நார்த்துபைட்டு கனிமம் காணப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நார்த்துபைட்டு&oldid=4153838" இலிருந்து மீள்விக்கப்பட்டது