நார்ப்புரதம்
நார்ப்புரதம் (scleroproteins) என்பது இரண்டு முக்கியமான புரதங்களில் ஒருவகை. மற்றது உருண்டைப் புரதம். இந்த நார்ப்புரதம் மாந்தர்கள் மற்றும் விலங்குகளின் உடல்களில் மட்டுமே காணப்படும் புரத வகை.
நார்ப்புரதங்கள் பொதுவாக நீரில் கரையாத, எளிதில் பிரியாத, உறுதியான, கம்பி போன்ற வடிவில் காணப்படும் புரதப் பொருள். இவற்றில் காணப்படும் நார் போன்ற இழைகளுக்கு இடையே பலவகைகளில் மூலக்கூறு இணைப்புகளும் காணப்படும் (டை-சல்பைடு பிணைப்புகள்). நகமியம் (கெரட்டின்) எனப்படும் கெட்டியான புரதம் இவ்வகை நார்ப்புரதப்பொருள்களால் ஆனவை.
நார்ப்புரதம், உடல்தசைகளில் உள்ள இணைப்புத் திசுககளிலும் (connective tissues), குருத்தெலும்பிலும், எலும்பின் உள்கட்டமைப்பிலும், தசையிலும் (தசை இழைகளிலும்) காணப்படுகின்றது.
நார்ப்புரதத்திற்கு எடுத்துக்காட்டுகள்: நகமியம் என்னும் கெரட்டின், கொல்லாஜன் (collagen) என்னும் கெட்டியான சேரகநார்ப்புரதம், எலாஸ்ட்டின் எனப்படும் நீட்சிப்புரதம் (elastin)