நார்மன் கட்லர்

நார்மன் கட்லர் (Norman cutler) (பிறப்பு : 10 மே 1949) அமெரிக்காவைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியர் ஆவார். சிகாகோ பல்கலைக்கழகத்தில் செவ்வியல்காலத் தமிழ் இலக்கியம் மற்றும் இடைக்காலத் தமிழ் இலக்கியம் ஆகியவற்றில் ஆய்வுப் பணிகளைச் செய்தவர்.[1] சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த ஏ.கே.ராமானுஜத்திடம் தமிழ் கற்றவர். 24 பிப்ரவரி 2002 அன்று தனது 52 வயதில் காலமானார்.[2]

இவரைக் கௌரவிக்கும் வகையில் சிகாகோ பல்கலைக்கழகம் 2007இல் நடத்திய "முதலாம் தெற்காசிய இலக்கியம் பற்றிய இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நார்மன் கட்லர் மாநாட்டிற்கு" (The first biennial Norman cutler conference on South Asia literature)[3] இவர் பெயரைச் சூட்டியது.

மேற்கோள்கள்

தொகு
  1. கார்த்திக், ஜெ. "பேராசிரியர் நார்மன் கட்லரின் தமிழாய்வுகள் - ஓர் அறிமுகநிலை". பெயல் ஆய்விதழ் 09:02: 5-11. 
  2. "Chronicle pege's information, University of Chicago". பார்க்கப்பட்ட நாள் 23.09.2023. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  3. கார்த்திக், ஜெ. "பேராசிரியர் நார்மன் கட்லரின் தமிழாய்வுகள் ஓர் அறிமுகநிலை". பெயல் ஆய்விதழ் 09:02: 5-11. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நார்மன்_கட்லர்&oldid=3796020" இலிருந்து மீள்விக்கப்பட்டது