நார்வி (நிலவு)

நார்வி (Narvi), அல்லது சனி XXXI (31) என்பது சனிக் கோளினுடைய இயற்கைத் துணைக்கோள் ஆகும்.[1] இது இசுகாட் எசு. செப்பர்ட் என்பவரால் 2003ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. தற்காலிகமாக S/2003 S 1 என்ற குறிப்பு வழங்கப்பட்டது. [2]

நார்வி படிமம்

குறிப்புகள் தொகு

நார்வியானது ஏறத்தாழ ஏழு கிமீ சுற்றளவில் சனிக்கோளை 19,371,000 கிமீ தொலைவில் 1006.541 நாள்களில், 137° சாய்வுக் கோணத்தில் நீள்வட்டமாக, (சனியின் நிலநடுக் கோட்டில் இருந்து 109° கோணத்திலும்), 0.320 சுற்றுப்பாதை வட்ட விலகலில் சுற்றிவருகிறது.

பெயர் தொகு

நோர்சு தொன்மவியலில் சிறந்தவரான நார்வி என்பவரின் பெயர் 2005ஆம் ஆண்டு சனவரியில் வைக்கப்பட்டது. இப்பெயர் 2005 சனவரி 21ஆம் நாள் ஒப்புக்கொள்ளப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. IAUC 8471: Satellites of Saturn January 21, 2005 (naming the moon)
  2. MPEC 2003-G39: S/2003 S 1 April 8, 2003 (discovery and ephemeris)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நார்வி_(நிலவு)&oldid=1919055" இலிருந்து மீள்விக்கப்பட்டது