நாற்று நடும் இயந்திரம்
நாற்று நடும் இயந்திரம் (rice transplanter) என்பது, நெல் வயல்களில் நெல் நாற்றுகளை நடவு செய்வதற்குப் பயன்படும் இயந்திரமாகும். நெல் சாகுபடியில் நாற்று நடுதல் மிக முக்கியமான ஒன்றாகும். மனிதர்களுக்கு பதிலாக இயந்திரங்கள் மூலம் நாற்று நடவு செய்யப் பயன்படுத்தப்படுகிறது. செலுத்து-வகை இயந்திரம் மின்சாரத்தால் இயங்குகிறது. வழக்கமாக, செலுத்து-வகை இயந்திரம் ஒருமுறை கடக்கும்போது ஆறு வரிசை நடவுகளையும், நடை-வகை இயந்திரங்கள் ஒருமுறை கடக்கும்போது நான்கு வரிசை நடவுகளையும் நடக்கூடியவை.[1][2]
ஆசியா தவிர, உலகின் பிற பகுதிகளிலும் நெல் சாகுபடி செய்யப்பட்டாலும், நெல் நாற்று நடும் இயந்திரங்கள் கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு ஆசியப் பகுதிகளில்தான் முக்கியமாகப் பயன்படுத்தப்படுகின்றன. விளைச்சல் குறைவாகக் கிடைத்தாலும் நாற்று நடுதலின்றி நேரிடையாக விதை தூவிப் பயிரிடும் முறை வேலையை எளிதாக்கும் என்பதால், ஆசியாவிற்கு வெளியேயுள்ள பகுதிகளிலுள்ள உழவர்கள் அம்முறையையே கையாள்கின்றனர்.[3]
அமைப்பு
தொகுநாற்று நடும் இயந்திரங்களில் மூன்று முக்கிய பகுதிகள் உள்ளன:
- கூரை போன்ற நாற்றுத் தட்டு; இதில் பாய்போல நாற்றுகள் வைக்கப்படுகின்றன;
- நாற்றுத் தட்டை நகர்த்தும் நகர்த்தி;
- நாற்றுத் தட்டுகளிலிருந்து நாற்றுகளை எடுத்து நிலத்தில் நடக்கூடிய கவைகள்.
சிறப்பு அம்சங்கள்
தொகு- குறைந்த செலவில் அதிக நாற்றுகள் நட உதவுகிறது.
- குறைந்த நேரத்தில் அதிக நாற்றுகள் நடப்படுகிறது.
- விருப்பமான நாற்று வகைகளை தேர்வு செய்ய உதவுகிறது.
- பல மனிதர்களின் உழைப்பை மிச்சப்படுத்துகிறது.
- நவீன அறிவியல் அறிவை நடைமுறைப்படுத்துகிறது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Jr, Harold M. Schmeck (1987-01-13). "SCIENTISTS TRANSPLANT GRAIN GENES" (in en-US). The New York Times. https://www.nytimes.com/1987/01/13/science/scientists-transplant-grain-genes.html.
- ↑ 曹梓楠. "Innovative farmer turns ideas into reality". www.chinadaily.com.cn. பார்க்கப்பட்ட நாள் 2023-02-23.
- ↑ "PhilRice develops local riding-type rice transplanter | PRRI". Philippine Rice Research Institute (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-07-24. பார்க்கப்பட்ட நாள் 2023-02-23.
- ↑ 1.www.farming-machine.com/product/planting-machine/paddy-transplanter.html