நால்தார் ஏரிகள்

பாக்கித்தானின் கில்கிட்-பால்டிஸ்தானில் உள்ள ஏரிகள்

நால்தார் ஏரிகள் (Naltar Lakes) என்பது நால்தார் பள்ளத்தாக்கில் 3,050–3,150 மீட்டர் (10,010–10,330 அடி) உயரத்தில் அமைந்துள்ள மூன்று ஏரிகளாகும். இது பாஷ்கிரி ஏரிகள் என்றும் அழைக்கப்படுகிறது. மூன்று ஏரிகளில் ஒன்றில் ஏரியின் உள்ளே வளரும் புற்கள் காரணமாக நீரின் நிறம் பச்சை நிறத்தில் உள்ளது. மற்ற இரண்டும் நீல நிறமாக உள்ளது. முதலாவது, பாஷ்கிரி ஏரி, மேல் நால்தார் (அல்லது நால்தார் பாலா) பகுதியிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் (7.5 மை) தொலைவில் அமைந்துள்ளது. [1] பள்ளத்தாக்கில் ஓடும் ஓடையை ஒட்டிய மண் சாலை ஏரிகள் வரை செல்கிறது. ஏரிகள் அடர்ந்த பைன் காடுகளால் சூழப்பட்டுள்ளன. மே முதல் அக்டோபர் வரை ஏரிகளைப் பார்வையிட சிறந்த நேரம். குளிர்காலத்தில், நால்தார் பள்ளத்தாக்கில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக, வாகனம் மூலம் ஏரியை அடைய முடியாது. [2]

நால்தார் ஏரிகள்
பச்சை நிறமுடைய நால்தார் அல்லது பாஷ்கிரி ஏரி-I
நால்தார் ஏரி அல்லது பாஷ்கிரி ஏரி-II
நீல நிறமுடைய நால்தார் ஏரி-III
Surface elevation = 3050-3150 m

இதனையும் பார்க்கவும் தொகு


சான்றுகள் தொகு

  1. "Naltar Valley". Archived from the original on 2020-08-13. பார்க்கப்பட்ட நாள் 2022-10-24.
  2. "Naltar Lake | The Emerald Azure Lake in Pakistan". skardu.pk. 6 June 2016. பார்க்கப்பட்ட நாள் 3 November 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நால்தார்_ஏரிகள்&oldid=3774159" இலிருந்து மீள்விக்கப்பட்டது