நால்தார் பனிச்சறுக்கு மைதானம்

பாக்கித்தானிலுள்ள பனிச் சறுக்கு மைதானம்

நால்டார் பனிச் சறுக்கு மைதானம் (Naltar ski resort) என்பது பாக்கித்தானின் கில்கிட்-பால்டிஸ்தான் மாகாணத்தில் உள்ள நல்தார் பள்ளத்தாக்கின் காரகோரம் வரம்பில் 2,950 மீட்டர் (9,680 அடி) உயரத்தில் அமைந்துள்ள ஒரு பனிச்சறுக்கு மைதானமாகும்.[1] [2] கில்கித் நகரத்திலிருந்து வடமேற்கே 40 கிலோமீட்டர் தொலைவில் இந்த மைதானம் அமைந்துள்ளது. இது பாக்கித்தானின் பனிச்சறுக்கு அமைப்பிற்கும் பாக்கித்தான் தேசிய பனிச் சறுக்கு போட்டிகளுக்குமான முக்கிய இடமாகவும் செயல்படுகிறது. [3] இந்த அமைப்பு 2016இல் காரகோரம் கோப்பைக்கானப் போட்டியை நடத்தியது. [4]

நால்தார் பனிச்சறுக்கு மைதானம்
நால்தார் பனிச்சறுக்கு மைதானம் is located in Gilgit Baltistan
நால்தார் பனிச்சறுக்கு மைதானம்
நால்தார் பனிச்சறுக்கு மைதானம்
நால்தார் பனிச்சறுக்கு மைதானம் is located in பாக்கித்தான்
நால்தார் பனிச்சறுக்கு மைதானம்
நால்தார் பனிச்சறுக்கு மைதானம்
ஆள்கூறுகள்: 36°09′55″N 74°10′42″E / 36.16528°N 74.17833°E / 36.16528; 74.17833

வசதிகள்

தொகு

நல்தார் பாக்கித்தானின் மிகப் பழமையான பனிச்சறுக்கு மைதானமாகும். [5] இருப்பினும், மலம் ஜப்பா பனிச்சறுக்கு மைதானத்தை விட ஒப்பீட்டளவில் குறைவாக அறியப்பட்ட மற்றும் வளர்ச்சியடையவில்லை. கில்கித்திலிருந்து நால்தார் செல்லும் சாலையின் மோசமான நிலையே இதன் வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளது. நிலவரப்படி, பனிச்சறுக்கு ஆர்வலர்கள் 4 சக்கர வாகனத்தில் பயணம் செய்தால்தான் விரைவில் இவ்விடத்தை விரைவில் அடைய முடியும். [6] 2015 ஆம் ஆண்டில், ஒரு மின்தூக்கி நாற்காலி கட்டப்பட்டது. [7] கில்கித்-நால்தார் சாலையை மீண்டும் கட்டமைக்கும் பணியும் முன்மொழியப்பட்டது.

சான்றுகள்

தொகு
  1. "Naltar Valley Ski Resort Guide, Location Map & Naltar Valley ski holiday accommodation".
  2. "Ski resort Naltar - Skiing Naltar".
  3. "National Ski Championship begins in Naltar". 10 February 2015.
  4. "Karakoram Alpine Ski Cup: Ukraine, Turkey confirm participation - The Express Tribune". 18 January 2016.
  5. "A lift to Naltar - TNS - The News on Sunday". Archived from the original on 2017-02-22. பார்க்கப்பட்ட நாள் 2022-10-25.
  6. "National Ski Championship begins in Naltar". 10 February 2015."National Ski Championship begins in Naltar". 10 February 2015.
  7. "Norway, Philippines envoys killed in helicopter crash, army claims no terror attack". 8 May 2015.