நாளிதழ் வடிவம்

நாளிதழ் வடிவங்கள் (Newspaper format) என்பதானது பல நாடுகளில் காணப்படுகின்ற பலவிதமான வடிவங்களைக் குறிக்கிறது. பெரும்பாலான நாடுகளில் இவை பொதுவாக உள்ளன. நாளிதழ் வடிவம் என்பது நாளிதழுக்குத் தக்கபடி அமைகின்ற அச்சிடப்படும் பகுதியைக் குறிக்கும்.

சில நாடுகளில், குறிப்பிட்ட வடிவங்கள் குறிப்பிட்ட வடிவ நாளிதழ்களோடு பொருந்தி வருவதைக் காணலாம். உதாரணமாக ஐக்கிய இராச்சியத்தில் டேப்ளாய்ட் என்பதற்கும் ப்ராட்ஷீட் என்பதற்கும் வேறுபாடுகள் உள்ளன. ஏனெனில் அது உள்ளடக்கத்தின் தரத்தினையும் குறிக்கிறது. அந்த நிலையில்தான் மிகப்புகழ் பெற்ற நாளிதழ்கள் டேப்ளாய்ட் வடிவத்தைப் பயன்படுத்துகின்றன. அதனடிப்படையில் டேப்ளாய்ட் ஊடகவியல் என்பதானது அமைகிறது.

தற்போதைய நிலை தொகு

மான்பிரட் வெர்வெல் ஆய்வக இயக்குநரும் இப்ரா அமைப்பின் துணைத்தலைவரும் IFRA பெர்லைனர் வடிவ முறையே தற்போதைய நிலையில் காணப்படுகிறது என்கிறார்.

அண்மையில்,[1] பல நாளிதழ்கள் இணையத்திற்கேற்ற பக்க அளவு துண்டிப்பு என்ற நிலையில் மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளன. அதன்படி குறுகிய அளவிலான தாளினை (அதே சமயம் குறைந்த செலவில்) பயன்படுத்தும் முறையாக அச்சாக்க வடிவில் புதிய மாற்றம் கொணரப்பட்டுள்ளது. சில இடங்களில் ப்ராட்ஷீட் தாளே வழக்கமான டேப்ளாய்ட் வடிவோடு ஒத்துப்போகும் வகையில் சிறிய அளவு குறுக்கலாக்கப்படுகிறது. சராசரி ரோலின் 26.4 lb (12.0 kg), 45 அங் (110 cm) டயாமீட்டர் அச்சுத்தாள் நீளமாக 9.7 mi (15.6 km) காணப்படும்

அளவுகள் தொகு

  • டைவர்ஸ் டிஸ்பேட்ச் 914.4 mm × 609.6 mm (36.00 அங் × 24.00 அங்) (1.5)
  • ப்ராட்ஷீட் 749 mm × 597 mm (29.5 அங் × 23.5 அங்) (1.255)
  • நார்டிஷ் 570 mm × 400 mm (22 அங் × 16 அங்) (1.425)
  • ரீனிஷ் அரவுண்ட் 350 mm × 520 mm (14 அங் × 20 அங்) (1.486)
  • ஸ்விஸ் 475 mm × 320 mm (18.7 அங் × 12.6 அங்) (1.484)
  • பெர்லினர் 470 mm × 315 mm (18.5 அங் × 12.4 அங்) (1.492)
    • கார்டியன் இதழின் அச்சிடப்படும் பகுதி 443 mm × 287 mm (17.4 அங் × 11.3 அங்).[2]
  • டேப்ளாய்ட் 430 mm × 280 mm (17 அங் × 11 அங்) (1.536)

ஒத்துநோக்கல் தொகு

  • A2 தாள் 594 mm × 420 mm (23.4 அங் × 16.5 அங்)
  • B3 தாள்500 mm × 353 mm (19.7 அங் × 13.9 அங்)
  • C3 தாள் 458 mm × 324 mm (18.0 அங் × 12.8 அங்)
  • A3 தாள் 420 mm × 297 mm (16.5 அங் × 11.7 அங்)
  • A4 தாள் 297 mm × 210 mm (11.7 அங் × 8.3 அங்)

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Press web". Naa.org. Archived from the original on July 4, 2008. பார்க்கப்பட்ட நாள் 2010-12-12.
  2. Richard Hollis. "How we got the measure of a Berliner". The Guardian. https://www.theguardian.com/newsroom/story/0,,1566507,00.html. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாளிதழ்_வடிவம்&oldid=3587342" இலிருந்து மீள்விக்கப்பட்டது