நாவற்குழி சித்திர வேலாயுதர் கோவில்
நாவற்குழியின் தெற்கு எல்லையில் காணப்படும் மணல் குன்றுகளிற்கு அருகே சில நாவல்மரங்களின் அடிப்பாகம் மணலில் புதையுண்டு கிளைகள் மணளோடு கொஞ்சி விளையாடும் ஆவணி, புரட்டாதி மாதங்களில் நாவல் கொத்து கொத்தாக பழுத்திருக்கும். அம்மாதங்களில் இவ்விடம் வந்தால் சுட்டபழம் புசிக்கும் அவசியம் இருக்காது. நின்றபடியே பறித்து சுவைக்கலாம். பருத்து கறுத்துக்கனிந்த பழங்களின் சுவையே அலாதி.
நாவற்குழி சித்திர வேலாயுதர் கோவில் | |
---|---|
![]() | |
ஆள்கூறுகள்: | 9°39′13″N 80°05′27″E / 9.65358°N 80.0909251°Eஆள்கூறுகள்: 9°39′13″N 80°05′27″E / 9.65358°N 80.0909251°E |
பெயர் | |
பெயர்: | நாவற்குழி சித்திர வேலாயுதர் கோவில் |
அமைவிடம் | |
நாடு: | இலங்கை |
மாகாணம்: | வட மாகாணம் |
மாவட்டம்: | யாழ்ப்பாணம் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | முருகன் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | Tamil architecture |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | 1818 |
அமைத்தவர்: | சுப்பிரமணியமுதலி |
சித்திர வேலாயுதர் கோவில் மணல் குன்றுகளிடையே பள்ளத்தில் நிற்கும் பனைகள் தாமீன்ற நுங்கு குலைகளின் பாரத்தை தாங்கி கொண்டே சாமரை வீசி எம்மை வரவேற்பது போல் காட்சி அளிக்கும். பருவமடைந்த வடலியொன்று தான் இன்னும் கன்னியல்ல என்பதை காட்டுவதற்கு நுங்குக்குலை தள்ளி நிற்கிறது. அவ்விடத்தை இருந்து பார்த்தால் வயல் வெளியில் சித்திர வேலாயுதர் கோயில் தென்படும். யாட்டாவளை என அழைக்கப்படும் இவ்வயல்வெளியில் சித்திர வேலாயுதர் கோயில் காணப்படுகிறது . ஏறக்குறைய 250 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கோவிலாக இது காணப்படுகிறது.
கிளைகள் ஒன்றோடொன்று பின்னி, சூரிய ஒளி விழா வண்ணம் குடை பிடித்து நின்ற பெருவிருட்சங்கள் நிறைந்து இவ்விடத்தில் கொட்டில் அமைத்து வேல் வைத்து பூசை வழிபாடு செய்து வந்தனர்.
பூசை முறைகள்
1818 இல் சுப்பிரமணியமுதலி என்பவர் கற்கொண்டு கட்டடம் அமைத்து அந்தணர் நித்திய நைமித்திய பூசை செய்ய ஒழுங்குகள் செய்தார்.
கந்தசஷ்டி பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. ஆறாவது நாள் சூரசங்காரமும் ஏழாவது நாள் திருக்கல்யாணம் நடந்தேறி அலங்கரிக்கப்பட்ட இணைந்த வள்ளங்களில் சித்திர வேலாயுதர் தெய்வானை வள்ளி சமேதராய் எழுந்தருளி ஆலய திருக்குளத்தில் உலாவரும் பொழுது தாமரை இலைகளில் எரியும் கற்பூரம், தீ வட்டிகள் நிறைந்துள்ள தடாகத்து நீரில் மேலும் கீழுமாக தோன்றும் காட்சியின் அழகே அழகு.
ஆறுமுகநாவலர் காலத்தில் ஆரம்பமான கந்தபுராணகலாச்சாரம் நாவற்குழியில் வாழ்ந்த சைவபெரியோரால் பேணி வளர்க்கப்பட்டது எனக்கூறின் மிகையாகாது.
கந்தசஷ்டி நாட்களில் சித்திர வேலாயுதர் ஆலயத்தில் கந்த புராண படனம் நடைபெறும் . காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் சின்னத்தம்பு, விசுவலிங்கம் சுப்பிரமணியம், சொக்கநாதர்கார்த்திகேயன், தாமோதரம் வேலுப்பிள்ளை ஆகியோர் இசையோடு பாடிபொருள் கூறியதை என்றும் மறக்க முடியாது என்று இங்கே கூறுகின்றனர்.