நாவல் (நூல்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நாவல் என்பது ஜெயமோகன் எழுதிய ஒரு கோட்பாட்டு நூல். 1991 ஆம் ஆண்டு மடல் பதிப்பகம் இதை வெளியிட்டது. நாவல் என்ற கலைவடிவத்தை வடிவநோக்கில் வரையறுத்து எழுதப்பட்ட முதல் தமிழ் நூல் இது. இதற்கு முன்னோடியாக கைலாசபதி எழுதிய நாவல்கலை என்ற நூலைச் சொல்லலாம். இந்நூல் கிழக்கு வெளியீடாக வந்துள்ளது
உள்ளடக்கம்
தொகுஜெயமோகன் தமிழில் நாவல்கள் என்று சொல்லப்படும் நூல்களை பல வகைகளாக பிரிக்கிறார். தொடர்கதைகளை நீள்கதைகள் என்று வரையறைசெய்கிறார். குறுநாவல்கள் சிறுகதையின் வடிவத்தை சற்று நீட்டி எழுதப்படுபவை. நாவல் என்பது விரிந்த காலப்பின்னணியும் பலகிளைகளாக விரியும் தரிசனமும் கொண்ட ஒரு பெரும் தொகுப்புவடிவம் என்கிறார். நாவலின் வடிவம், தரினம் ஆகியவற்றை விரிவாக வரையறுக்கும் ஜெயமோகன் அந்த கோணத்தில் தமிழில் உள்ள நாவல்களை தரவரிசைப்படுத்தி விவாதிக்கிறார்