நவூர், ஆர்மீனியா

(நாவூர், ஆர்மீனியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நவூர் (Navur, (ஆர்மீனியம்: Նավուր) ஆர்மீனியாவின் தவுசு மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். மாநிலங்களுக்கு இடையேயான ஜி-36 சாலை இவ்வூர் வழியாக செல்கிறது. இவ்வூரின் கிழக்கே 3 கிமீ தொலைவில் பெர்த் நகரம், வடக்கே 3 கிமீ தொலைவில் சின்சின் கிராமம், மேற்கில் 15 கிமீ தொலைவில் இசேவன் நகரம் ஆகியவையும், தெற்கே மக்கள் வசிக்காத மலைத்தொடர்களும் நீண்டுள்ளது. நவூர் கிராமம் தவுசு, அகும் ஆறுகளுக்கு இடையில் அமைந்துள்ளது.

நவூர்
Նավուր
நவூர் is located in ஆர்மீனியா
நவூர்
நவூர்
ஆள்கூறுகள்: 40°51′41″N 45°19′3″E / 40.86139°N 45.31750°E / 40.86139; 45.31750
நாடு ஆர்மீனியா
மாகாணம்தாவுசு
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்1,065
நேர வலயம்ஒசநே+4 (அர்மீனிய நேரம்)
சியோநெட்டு (GEOnet) பெயர் வழங்கியில் இருந்து நவூர், ஆர்மீனியா

இவ்வூரில் கிமு III-I மிலேனியம் காலக் கோட்டைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.[2]

இங்குள்ள மக்கள் கால்நடை வளர்ப்பதிலும், தானியங்களையும் தீவனப் பயிர்களையும் வளர்ப்பதிலும் ஈடுபட்டுள்ளனர். இங்கு ஒரு பள்ளி, ஒரு மருத்துவ நிலையம், ஒரு பண்பாட்டு மையம், ஒரு மழலையர் பள்ளி ஆகியன உள்ளன.

காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Statistical Committee of Armenia. "The results of the 2011 Population Census of Armenia" (PDF).
  2. "Список памятников". Archived from the original on 2014-02-01.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
நவூர்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவூர்,_ஆர்மீனியா&oldid=3582857" இலிருந்து மீள்விக்கப்பட்டது