நாவேந்தன் (முருகேசன்)
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
நாவேந்தன் (பிறப்பு : 30. நவம்பர் 1945) என்பவர் ஒரு தமிழ் கவிஞர், மொழிபெயர்பாளர் திரைப்பட பாடலாசிரியர் ஆவார். இவரது பக்தி பாடல்கள் குறுந்தகடுகளாக வெளிவந்துள்ளன.
வாழ்கைக் குறிப்பு
தொகுநாவேந்தன் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம், இராதாபுரம் என்னும் ஊரில் நாராயணசாமி, இணையருக்கு மகனாகப் தையல்நாயகி 30 நவம்பர் 1945 அன்று பிறந்தார். காஞ்சுபுரம் பச்சையப்பன் கல்லூரியில் பயின்றார். கல்லூரியில் பயிலும்போதே கவிதைகள் எழுதியதால் கல்லூரி கவிஞர் என்றழைக்கப்பட்டார்.
நூல்கள்
தொகுபடைப்புகள்
தொகு- வீணை மலர்கள் (கவிதைத் தொகுப்பு)
- இன்று வந்த இறந்த காலம் (காதலர்களின் பிரிவை அடிப்படையாகக் கொண்ட கவிதைத் தொகுப்பு)
- மலர்களின் மாநாடு (கவிதைத் தொகுப்பு) 2011 ஆண்டு தமிழக அரசின் பெற்றது.[1]
- அன்னை எங்கே (கவிதை நாடகம்)
- ஆரோக்கியமே ஆனந்தம் (நல்வாழ்வு விழிப்புணர்வு கையேடு)
மொழிபெயர்புகள்
தொகு- உலகக் கவிதை மேடை அமைப்போம் (50 சோவியத் கவிதைகளை ஆங்கிலத்தில் இருந்து செய்த தமிழாக்கம்)
- கலீல் ஜிப்ரானின் தத்துவக் கதைகளும் கவிதைகளும் (கலீல் ஜிப்ரானின் கவிதைகளின் தமிழாக்கம்)
- இந்துக்களின் வாழ்க்கை நெறி, (முனைவர் சி கே கரியாலியின் Hindu way of Life, நூலின் தமிழாக்கம்)
- பெண்களுக்கே சொந்தம் (முனைவர் சி கே கரியாலியின் Womens Own நூலின் தமிழாக்கம்)
- தமிழ் நாட்டின் முதன்மைக்கு அம்மா மாடல் (முனைவர் சி கே கரியாலியின் Amma Model of Development iñ TN நூலின் தமிழாக்கம்)
- நான் பெறாத இரு புதல்வியர் (ஆளுநர் எஸ் எஸ். பர்னாலாவின் My Other Two Daughters என்ற நூலின் தமிழாக்கம்)
- உலகம் பேசும் காதல் மொழி (ஆங்கிலக் காதல் கவிதைகளின் தமிழாக்கம்)
இசைப் பாடல் குறுந்தகடுகள்
தொகு- ஜய ஜய சாயி
- ஆனைமுகமும் ஆறுமுகமும்
- அருட்பெருஞ்ஜோதி
- சிவாலயம் (இசையமைத்தவர் திருச்சி லோகநாதன)
பாடல் எழுதிய திரைப்படங்கள்
தொகு- கல்யாண வைபோகம்[2]
- வாணி மஹால்
- சங்கராபரணம் (தமிழ்)
- கேட்டவரெல்லாம் பாடலாம்
உசாத்துணை நூல்
தொகு- தமிழ் இலக்கிய வரலாறு, மது. ச. விமலானந்தம்
- ↑ தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2011[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2022-04-04. பார்க்கப்பட்ட நாள் 2020-04-13.