நா. ஆண்டியப்பன்
நா. ஆண்டியப்பன் (பிறப்பு: செப்டம்பர் 19,1947) இவர் ஒரு சிங்கப்பூர் எழுத்தாளராவார். தமிழ்நாடு, புதுக்கோட்டை மாவட்டம் இராங்கியம் எனும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தனது ஆரம்பக் கல்வியைத் தனது ஊரிலேயே கற்றுப் பின்பு, 9வது வயதில் 1956ல் இவரது தந்தையாரால் மலாயாவிலுள்ள தெலுக் ஆன்சன் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு ஆங்கிலோ - சீன ஆங்கிலப் பள்ளியில் மீண்டும் தனது கல்வியை முதல் வகுப்புலிருந்தே ஆரம்பித்தார். அதைத் தொடர்ந்து செயிண்ட் அந்தோணி பள்ளியில் சீனியர் கேம்பிரிட்ஜ் வரை படித்த இவர் பிறகு தமிழகம் வந்து கல்வியைத் தொடர்ந்தார். மதுரை தியாகராசர் கல்லூரியில் தாவரவியலில் இளநிலைப் பட்டமும் பெற்றார்.
தொழில் முயற்சி
தொகுமலேசியாவுக்கு திரும்பிய இவர் சில ஆண்டுகள் வர்த்தகராகவும், பின்பு 1976ல் கோலாலம்பூரில் தமிழ் மலர் நாளிதழில் இணைந்து அதன் துணை நிர்வாக ஆசிரியராகவும், 1983ல் மீண்டும் சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்து அங்குள்ள ஒலிபரப்புக் கழகத்தின் தமிழ்ச் செய்திப் பிரிவில் துணை நிர்வாக ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
வகித்த பதவிகள்
தொகுசிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் 1993ல் உறுப்பினராகவும், 1995ல் அதன் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.
இலக்கியப் பணி
தொகுதான் கற்கும் காலத்திலிருந்தே எழுத்துப் பணியில் ஈடுபாடுகாட்டிவந்த இவர் தமக்குத் தமிழ் ஆர்வத்தையூட்டிய பெருமை மதுரை தியாகராசர் கல்லூரியைச் சாரும் எனக் கூறுகிறார். இவரின் முதல் சிறுகதை தமிழ் மலரில் 1967ல் பிரசுரமானது. அதைத் தொடர்ந்து சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என பல்துறைகளிலும் பங்களிப்பு நல்கியுள்ளார். பாரதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பாஞ்சாலி சபதத்தை நாடகமாக்கி தமிழ் மலரில் தொடராக எழுதிவந்தார்.
எழுதியுள்ள நூல்கள்
தொகு- பாரதியின் பாஞ்சாலி சபதம் (1985)
- வெற்றித் திருமகள் (1993)
பெற்ற விருதுகளும், கௌரவங்களும்
தொகுஇலக்கிய வேந்தன் பட்டம்
உசாத்துணை
தொகு- சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு