நா ஒரு ஏலியன் (2020 இசைத்தொகுப்பு)

நா ஒரு ஏலியன் (செந்தமிழ்: நான் ஒரு வேற்றுகிரகவாசி) என்பது இப்பாப்பு தமிழாவின் இரண்டாவது ஒலியக இசைத்தொகுப்பு ஆகும்.[1] இவ்விசைத்தொகுப்பு 14 ஆகத்து 2020 அன்று வெளியானது.[2]

நா ஒரு ஏலியன்
ஒலியகம்
வெளியீடுஆகத்து 14, 2020
ஒலிப்பதிவு2020
இசைப் பாணிஇப்பாப்பு
நீளம்23:03
மொழிதமிழ்
இசைத்தட்டு நிறுவனம்திங்க்கு மியூசிக்கு இந்தியா
இசைத் தயாரிப்பாளர்இப்பாப்பு தமிழா
இப்பாப்பு தமிழா காலவரிசை
இப்பாப்பு தமிழன் (2012)
(2012)
நா ஒரு ஏலியன்
(2020)

வெளியீடு தொகு

ஆகத்து 4, 2020 அன்று திங்க்கு மியூசிக்கு தன் திவிட்டர் கணக்கில் இப்பாப்பு ஆதி மீண்டும் தனித்துவ இசைக்கு நா ஒரு ஏலியன் என்கிற இசைத்தொகுப்பின் மூலம் திரும்புவதாக அறிவித்தது.[3] இந்த இசைத்தொகுப்பு ஆறு பாடல்களை உள்ளடக்கியது. அதில் முதல் பாடல் நெட்டத் தொறந்தா ஆகத்து 6, 2020 அன்று வெளியானது.[4] ஏனைய பாடல்கள் அனைத்தும் ஒரே இசைத்தொகுப்பாக ஆகத்து 14, 2020 அன்று வெளியானது.[5]

விமர்சனம் தொகு

இந்த இசைத்தொகுப்புக்கு நேர்மறையான விமர்சனங்களே வழக்கப்பட்டன. இதைப் பற்றி தி நியூ இந்தியன் எக்சுபிரசிற்கு ஆதி கொடுத்த பேட்டியில் தெரிவித்தவதாவதன் தமிழாக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நான் தமிழனாக இருப்பதில் பெருமைக் கொள்கிறேன். ஆனால், இந்த சமூகம் பிறரைத் தமிழர், கன்னடர் போன்ற பெயர்களால் பாகுபாடு காட்டினால், நான் அத்தகைய நஞ்சத்தில் [6] இருந்து விலகி இருந்து என்னை நான் வேற்றுகிரகவாசியாக அடையாளப்படுத்திக் கொள்வேன்.[7]

இசைத்தடப் பட்டியல் தொகு

இவ்விசைத்தொகுப்பின் இசைத்தடப் பட்டியலை திங்க்கு மியூசிக்கு 22 சூலை 2020 அன்று வெளியிட்டது. [8]

எண் பாடல் தலைப்பு இசை நீளம்
1 நெட்டத் தொறந்தா 3:33
2 தார்க்கு தாட்சு 3:57
3 எல்லாமே கொஞ்ச காலம் 4:38
4 இணையம் 3:03
5 போகட்டும் போகட்டும் போ 4:00
6 யாருமே வேணாம் 3:52
மொத்த நீளம் 23:03

மேற்கோள் தொகு

  1. Gupta, Rinku (4 August 2020). "ஹிப்ஹாப் தமிழாவின் நா ஒரு ஏலியன் - சினிமா ஸ்ப்பீக்ஸ் ஆங்கிலக் கட்டுரை". CinemaSpeak.in. https://web.archive.org/web/20200821062036/https://www.cinemaspeak.in/2020/08/hip-hop-tamizha-returns-with-naa-oru.html?m=1 from the original on 21 August 2020. பார்க்கப்பட்ட நாள் 4 August 2020. {{cite web}}: |archive-url= missing title (help)
  2. Hiphop Tamizha (14 August 2020). "நா ஒரு ஏலியன் - ஆப்பிள் மியூசிக்". Apple Music. https://archive.today/20200816163610/https://music.apple.com/ky/album/naa-oru-alien-ep/1527712359 from the original on 14 August 2020. பார்க்கப்பட்ட நாள் 14 August 2020. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help); |archive-url= missing title (help)
  3. "Hiphop Tamizha is back with an independent album after 8 years". The Times of India. 4 August 2020. https://web.archive.org/web/20200821062037/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/hiphop-tamizha-is-back-with-an-independent-album-after-8-years/articleshow/77355379.cms from the original on 21 August 2020. பார்க்கப்பட்ட நாள் 4 August 2020. {{cite web}}: |archive-url= missing title (help)
  4. "Watch: Hiphop Tamizha's latest song 'Net ah Thorandha' references 'Avengers'". தி நியூஸ் மினிட். 15 August 2020. https://web.archive.org/web/20200821062037/https://www.thenewsminute.com/article/watch-hiphop-tamizhas-latest-song-net-ah-thorandha-references-avengers-130248 from the original on 21 August 2020. பார்க்கப்பட்ட நாள் 15 August 2020. {{cite web}}: |archive-url= missing title (help)
  5. Think Music India (14 August 2020). "Naa Oru Alien Songs 👽 feat. Hiphop Tamizha | Audio Jukebox". யூடியூப். பார்க்கப்பட்ட நாள் 14 August 2020.{{cite web}}: CS1 maint: url-status (link)
  6. https://agarathi.com/word/%e0%ae%a8%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d
  7. Darshan, Navein (18 August 2020). "I do not hesitate to apologise when I am wrong: Hip hop Tamizha Adhi". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. https://web.archive.org/web/20200819144836/https://www.newindianexpress.com/entertainment/tamil/2020/aug/18/i-do-not-hesitate-to-apologise-when-i-am-wrong-hip-hop-tamizha-adhi-2184679.html from the original on 19 August 2020. பார்க்கப்பட்ட நாள் 6 August 2020. {{cite web}}: |archive-url= missing title (help)
  8. Hiphop Tamizha (22 July 2020). "Today at 5pm – tracklist ✌🏻". Instagram. https://archive.today/20200821062248/https://www.instagram.com/p/CD2yuUGjREN/ from the original on 21 August 2020. பார்க்கப்பட்ட நாள் 14 August 2020. {{cite web}}: |archive-url= missing title (help)