நிகழ்காவிய அரங்கு
இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தோன்றிய அரங்கியல் இயக்கம் இதுவாகும்.1920 களில் பெர்தோல்ட் பிரெக்ட் இதனை அறிமுகம் செய்தார்.ஆயினும் நிகழ்காவிய அரங்குக்குரிய உள்ளடக்கம் அரிஸ்ரோட்டிலிடமிருந்து பெறப்பட்டதாகக் கொள்ளப்படுகிறது.
நாடகம் உருவாக்கும் நுண்ணுணர்ச்சி மாயைகளை உடைத் தெறிந்து சுவைஞர்களிடத்து காரணங் காணும் திறன்களை வளர்த் தெடுக்கும் உபாயமாக இவ்வரங்கு கூறப்படுகிறது.அரங்கில் நிகழும் திரிபுக்காட்சிகளும் கண்மாயைத் தோற்றங்களும் உடைத்தெறியப்படுகின்றன.கண்முன்னே தோன்றுவது மேடை என்ற உணர்வு அவ்வப்போது ஊட்டப்படுகிறது. உணர்ச்சி பிரவாகத்ததையூட்டும் காட்சிகளினிடையே நாளாந்தம் கானும் மெய்மைசார் காட்சிகள் புகுத்தப்படுகின்றன."[1] நாடகத்தின் செயல் ஓட்டத்தைத் தடுக்கும் வகையில் உணர்ச்சி சார்பற்ற ஆவணப்படங்களைக் காட்டுதல், சுலோகங்களைக் காட்டுதல், பாடல்களை உட்புகுத்துதல் என்பன நிகழ்காவிய அரங்குகளில் இணைக்கப்படுகின்றன.[2]
வெளியிணைப்பு
தொகு- நிகழ்காவிய அரங்கு பரணிடப்பட்டது 2008-09-25 at the வந்தவழி இயந்திரம் – University of Southern Queensland