நிகழ்வெண்
புள்ளியியலில் ஒரு நிகழ்ச்சியின் நிகழ்வெண் (frequency) என்பது எடுத்துக்கொள்ளப்பட்ட சமவாய்ப்புச் சோதனையின் போது அந்நிகழ்ச்சி எத்தனை முறை நடைபெறுகிறது என்பதைக் குறிக்கும் எண்ணாகும். என்ற நிகழ்ச்சியின் நிகழ்வெண் எனக் குறிக்கப்படுகிறது. வரைபடங்களில் இந்நிகழ்வெண்கள், நிகழ்வெண் செவ்வகப்படங்கள் மூலம் குறிக்கப்படுகின்றன.
- சார்புடை நிகழ்வெண்
ஒரு நிகழ்ச்சியின் நிகழ்வெண்ணை மொத்த நிகழ்ச்சிகளின் எண்ணிக்கையால் வகுக்கக் கிடைப்பது அந்நிகழ்ச்சியின் சார்புடை நிகழ்வெண் (relative frequency) ஆகும்:
அனைத்து நிகழ்ச்சிகளின் () சார்புடை நிகழ்வெண்களின் () மதிப்புகளை வரைபடத்தில் குறித்தால் நிகழ்வெண் பரவல் கிடைக்கும்.