நிகும்பலா யாகம்
நிகும்பலா யாகம் என்பது பிரத்யங்கிரா தேவிக்கு செய்யப்படும் யாகம் ஆகும்.[1] இந்த யாகத்தில் மிளகாய் ஆகுதியாக கொடுக்கப்படுகிறது. யாகத்தீயில் இடப்படும் மிளகாய் காட்டம் ஏற்படுத்துவதில்லை என்பது சிறப்பு.
தொன்மம்
தொகுஇராமாயணத்தில் இந்திரஜித் என்பவர் மன்னர்களை வெற்றி கொள்ள எட்டுத்திசையிலும் மயான பூமியை உண்டாக்கினார். பிரத்யங்கிரா தேவிக்கு இந்த நிகும்பலா யாகம் நடத்தினார். இந்த யாகம் வெற்றிகரமாக முடிந்தால் சிறப்பான அருள் கிடைக்கும். இதையறிந்த ராமன், பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு பூசைகள் செய்தார். தன்னுடைய பக்கமே தர்மம் இருப்பதை பிரத்யங்கிராதேவியிடம் எடுத்துரைத்தார். ஆனாலும் இந்திரஜித்திற்கு பிரத்தியங்கிரா தேவியின் அருள் கிடைக்கிவில்லை. பஞ்ச பாண்டவர் வழிபட்ட தலம் அதனால் இவ்வூர் ஐவர்பாடி என அழைக்கப்பட்டது
பலன்கள்
தொகுஇந்த யாகத்தில் கலந்து கொண்டால், இழந்த பதவி மீண்டும் கிடைக்கும், எதிரிகள் தொல்லை நீங்கும், உத்தியோக உயர்வு கிடைக்கும், புதிய வேலை வாய்ப்பு உண்டாகும், திருமணம், வியாபாரம் நடக்கும் என்பது நம்பிக்கையாகும்.
கோயில்களில்
தொகு- தஞ்சாவூர் மாவட்டம் ஐயாவாடி கோயில் உட்பட பல்வேறு பிரத்தியங்கரா தேவி கோயில்களில் அமாவாசை நாளில் இந்த யாகம் நடத்தப்படுகிறது.
ஆதாரங்கள்
தொகு- ↑ தினகரன் ஆன்மிக மலர் 12.03.2016 நினைத்ததை நிறைவேற்றும் நகும்பலா யாகம் பக்கம் 12-13