நிகோலாய் இமானுவேல்

நிகோலாய் மார்க்கோவிச் இமானுவேல் (Nikolay Markovich Emanuel) (உருசியம்: Николай Маркович Эмануэль) என்பவர் அக்டோபர் 1, 1915 - டிசம்பர் 7, 1984 வரையிலான காலத்தில் வாழ்ந்த ஒரு உருசிய வேதியியலாளர் ஆவார். வேதி வினைவேகவியல் மற்றும் வேதி வினைகளின் விசையியல் ஆகிய பிரிவுகளில் இவர் முக்கிய நிபுணராக இருந்தார். 1944 முதல் மாசுகோ மாநில பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளாராக பணிபுரிந்த இவர், 1950 ஆம் ஆண்டில் முழுமையாக ஒரு பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1958 ஆம் ஆண்டில் பல்கலைக் கழகத்துடன் இணைந்த அறிவியல் கழகத்தில் உறுப்பினராக இருந்தார். 1966 ஆம் ஆண்டில் சோவியத் அறிவியல் கழகத்தில் முழு உறுப்பினரானார். 1974 இல் இவர் இராயல் சுவீடிய அறிவியல் கழகத்தில் ஒரு வெளிநாட்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மரணத்திற்குப் பின்னர் மாசுகோவில் அடக்கம் செய்யப்பட்டார்.

நிகோலாய் இமானுவேல்

மேற்கோள்கள்

தொகு
  • Yuri Uzikov (2007-12-12). "Portrait on a Postage Stamp". Bashvest. Archived from the original on 2011-07-22. பார்க்கப்பட்ட நாள் 2017-10-08.
  • "RUSSIAN ACADEMY OF SCIENCESN.M. EMANUEL INSTITUTE OF BIOCHEMICAL PHYSICS" (PDF). Archived from the original (PDF) on 2018-09-20. பார்க்கப்பட்ட நாள் 2017-10-08.
  • "State medal recipient" (in Russian).{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிகோலாய்_இமானுவேல்&oldid=3560671" இலிருந்து மீள்விக்கப்பட்டது