நிதிரானா நோதிகிங்

நிதிரானா நோதிகிங்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
இராணிடே
பேரினம்:
இனம்:
நி. நோதிகிங்
இருசொற் பெயரீடு
நிதிரானா நோதிகிங்
பரூவா மற்றும் பலர், 2023

நிதிரானா நோதிகிங் (Nidirana noadihing) என்பது இராணிடே குடும்பத்தில் உள்ள ஒரு தவளை சிற்றினமாகும்.[1] இது இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தில் காணப்படுகிறது. இந்தியாவிலிருந்து நிதிரானா பேரினத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் சிற்றினம் இது என்று கூறப்படுகிறது. மாதிரிகள் சேகரிக்கப்பட்ட நோவா-திகிங் ஆற்றின் காரணமாக சிற்றினப் பெயர் இடப்பட்டது. இசைத் தவளை வகையினைச் சார்ந்த நோவா-திகிங் தவளை இதன் அளவு, முட்டை வடிவ கால் முனை, முதுகில் உள்ள நுண்முண்டு மற்றும் தனித்துவமான அழைப்பு காரணமாக மற்ற நிதிரானா சிற்றினங்களிலிருந்து வேறுபடுகிறது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Frost, Darrel R. "Babina adenopleura (Boulenger, 1909)". American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 12 January 2020.
  2. Bitupan Boruah, V. Deepak and Abhijit Das. 2023. Musicians in the Marsh: A New Species of Music Frog (Anura: Ranidae: Nidirana) from Arunachal Pradesh, India. Zootaxa. 5374(1); 51-73. DOI: 10.11646/zootaxa.5374.1.3
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிதிரானா_நோதிகிங்&oldid=3835917" இலிருந்து மீள்விக்கப்பட்டது