நித்தின் கோவர்தன் கூலி

இந்திய கபடி வீரர்

நித்தின் கோவர்தன் கூலி (Nitin Govardhan Ghule) ஆண்கள் கபடி விளையாட்டில் இந்தியாவின் சார்பாக விளையாடக்கூடியவர் ஆவார். இவர் 1986 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் நாள் பிறந்தார். 2010 ஆம் ஆண்டு சீனாவின் குவாங்சௌ நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற கபடி அணியில் நித்தின் கூலியும் ஓர் உறுப்பினராக இருந்தார்[1]. சிறுவயதிலிருந்தே இவர் பூனாவின் போப்கேல் கிராமத்தின் ஆதிநாத் விளையாட்டுக் கழகத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். ஆசியக் கடற்கரை கபடி உள்ளிட்ட பல்வேறு தேசிய அளவிலான போட்டிகள், அனைத்துலகப் போட்டிகளில் இவர் கலந்து கொண்டு விளையாடினார்.

நித்தின் கூலி
Nitin Ghule
தனிநபர் தகவல்
இயற் பெயர்नितीन घुले
முழு பெயர்நித்தின் கோவர்தன் கூலி
தேசியம்இந்தியன்
பிறப்பு20 மே 1986 (1986-05-20) (அகவை 37)
பூனா
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுகபடி
நிகழ்வு(கள்)குவாங்சௌ 2010 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்- தங்கம்
பதக்கத் தகவல்கள்
ஆண்கள் கபடி
நாடு  இந்தியா
2010 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2010 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஆண்கள் கபடி
19 January 2016 இற்றைப்படுத்தியது.

மேற்கோள்கள் தொகு

  1. "GHULE Nitin Govardhan - Biography". The Official Website of the 16th Asian Games. Archived from the original on 27 நவம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 1 December 2010.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நித்தின்_கோவர்தன்_கூலி&oldid=3560690" இலிருந்து மீள்விக்கப்பட்டது