நித்யா ஆனந்து

நித்யா ஆனந்து (Nitya Anand, 1 சனவரி 1925 – 27 சனவரி 2024) என்பவர் ஒர் இந்திய விஞ்ஞானி ஆவார். இவர் பிரித்தானிய இந்தியாவில் 1925 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் தேதியன்று பிறந்தார். இலக்னோ நகரிலுள்ள மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராக பல ஆண்டுகள் பணியாற்றினார்.[1]. இந்திய மருந்தியல்நூல் ஆணையம் அதன் அறிவியல் ஆலோசனை அமைப்புக்கு இவரை 2005 ஆம் ஆண்டு தலைவராக நியமித்தது. இந்திய அரசாங்கம் 2012 ஆம் ஆண்டு பத்மசிறீ விருது வழங்கி சிறப்பித்தது [2].

நித்யா ஆனந்து ரேன்பாக்சி அறிவியல் அறக்கட்டளையின் தலைவராகவும் பணியாற்றினார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Indian Fellow". INSA. 2016. பார்க்கப்பட்ட நாள் May 13, 2016.
  2. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on நவம்பர் 15, 2014. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நித்யா_ஆனந்து&oldid=3888625" இலிருந்து மீள்விக்கப்பட்டது