நினிதி (மென்பொருள்)

கட்டற்ற மென்பொருளான நினிதி இலங்கை மென்பொருள் அறக்கட்டளை மூலம் உருவாக்கப்பட்ட நானோ தொழில்நுட்பத்திற்கான ஒரு ஒப்புருவாக்க (Modeling) மென்பொருளாகும். இம்மென்பொருள் மூலம் கார்பன் புறவேற்றுமை வடிவங்களான நானோகுழாய், கிராபீன் மற்றும் ஃபுலரின் ஆகியவற்றை அகக்கண்வழி காணலாம்.[1] மேலும் இம்மென்பொருள் மேற்கண்ட பொருண்மங்களின் மின்னியல் அமைப்புகளையும் ஆராயலாம். உதாரணத்திற்கு ஒரு நானோகுழாய் அதன் விட்டம் மற்றும் தீளத்தைப் பொறுத்து எவ்வாறு அதன் மின்னியல் அமைப்பு மாறுபடும் என்பதை இதன் மூலம் தெளிவுப்படுத்தலாம். ஜாவா நிரலாக்க மொழி மூலம் உருவாக்கப்பட்ட இம்மென்பொருள் மைக்ரோசாப்ட் விண்டோசு மற்றும் லினக்சு இயங்குதளங்களில் இயங்கக்கூடியது.

நினிதி
உருவாக்குனர்இலங்கை மென்பொருள் அறக்கட்டளை
தொடக்க வெளியீடு30 ஏப்ரல் 2010 (2010-04-30)
மொழிஜாவா
இயக்கு முறைமைலினக்சு, மைக்ரோசாப்ட் விண்டோசு
மென்பொருள் வகைமைஒப்புருவாக்கம்
உரிமம்குனூ பொதுமக்கள் உரிமம்
இணையத்தளம்sourceforge.net/projects/ninithi/

உசாத்துணை தொகு

  1. "Resources: ninithi". NanoHUB.org. பார்க்கப்பட்ட நாள் 2013-11-23.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நினிதி_(மென்பொருள்)&oldid=3268057" இலிருந்து மீள்விக்கப்பட்டது