நின்றொளிர் காளான்

நின்றொளிர் காளான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
Basidiomycota
வகுப்பு:
Basidiomycetes
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
M. luxaeterna
இருசொற் பெயரீடு
Mycena luxaeterna
Desjardin, B.A. Perry et Stevani, 2009

நின்றொளிர் காளான் (ஆங்கிலம்: Eternal light mushroom ; இலத்தின்: Mycena luxaeterna) பிரேசில், சாஓ போலோவுக்கு அண்மையில் உள்ள அட்லாண்டிக் வனப்பகுதியில் 2009இல் கண்டுபிடிக்கப்பட்ட உயிரொளிரி வகையைச் சேர்ந்த காளான்கள் ஆகும். இவற்றின் கூழ்மம் படர்ந்த தண்டில் இருந்து பிரகாசமான பச்சை-மஞ்சள் நிறம் 24 மணி நேரமும் ஒளிர்ந்து கொண்டிருக்கும்; இதனாலேயே நின்று நிலையாக ஒளிரும் காளான் (நின்றொளிர் காளான்) எனப் பெயரிடப்பட்டுள்ளது.[1][2] யமைக்கா, யப்பான், மலேசியா போன்ற நாடுகளிலும் இவை காணப்படுவது அறியப்பட்டுள்ளது.

சுமார் 1.5 மில்லியன்கள் அறியப்பட்ட காளான் இனவகைகளில் 71 இனங்களே உயிரொளிரிகள் ஆகும், இவற்றுள் நின்றொளிர் காளான் நோக்குதற்குச் சிறப்பாக அமைந்துள்ளதாலும் அதன் நித்தியமான ஒளிர்வாலும் 2011ம் ஆண்டுக்கான பத்துப் புதிய சிறப்பு உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

மங்கிய பகல் பொழுதில் அல்லது இரவு வேளைகளில் இவற்றின் ஒளிர்வைக் கண்ணுறலாம். இவை சிறிய காளான்கள், இவற்றின் தண்டின் விட்டம் எட்டு மில்லிமீட்டர், தண்டின் மேற்பரப்பு களி அல்லது கூழ்மம் போன்ற பாயத்தைக் கொண்டுள்ளது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Top 10 - 2011 :Bioluminescent Mushroom. International Institute for Species Exploration. . [Online] http://species.asu.edu/2011_species02 பரணிடப்பட்டது 2011-05-26 at the வந்தவழி இயந்திரம்.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2017-05-24. பார்க்கப்பட்ட நாள் 2011-06-01.
  3. Bryner, Jeanna. Glow-in-the-Dark Mushrooms Discovered. live science . [Online] http://www.livescience.com/9730-glow-dark-mushrooms-discovered.html.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நின்றொளிர்_காளான்&oldid=3588774" இலிருந்து மீள்விக்கப்பட்டது