நிமிசா சக்குங்கல்பரம்பில்

இந்தியப் பெண் தடகள வீரர்

நிமிசா சுரேசு சக்குங்கல்பரம்பில் (Nimisha Suresh Chakkungalparambil) இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த மாற்றுத்திறன் தடகள வீரர் ஆவார். இவர் பெண்களுக்கான டி47 வகை நீளம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்கிறார். 2022 ஆம் ஆண்டு ஆங்சோவில் நடைபெற்ற ஆசிய இணை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற இந்திய அணிக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 25 அக்டோபர் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் தேதியில் நடைபெற்ற டி47 வகையினருக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் நிமிசா தங்கப் பதக்கம் வென்றார் [1] [2] [3] [4]

நிமிஷா குசராத்தின் காந்திநகரில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் சிறப்பு மையத்தில் பயிற்சி பெற்றார். [5]

பிப்ரவரி 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் துபாயில் நடந்த 2 ஆவது பாசா பன்னாட்டு உலக இணை தடகள கிராண்டு பிரிக்சு போட்டியில் நீளம் தாண்டுதல் எஃப் 46/47 வகையினர் பிரிவில் 5.25 மீ. [5] தூரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். இப்போட்டி நிமிசாவின் முதல் பன்னாட்டு அளவு போட்டியாகும். [6]

மேற்கோள்கள்

தொகு
  1. Livemint (2023-10-25). "Asian Para Games 2023 medals tally: Full list of winners from India" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-01.
  2. PTI (2023-10-26). "Record-Breaking Sumit Antil Leads Way As India Bags 30 Medals, Including Six Gold". பார்க்கப்பட்ட நாள் 2023-11-01.
  3. Hoover (2023-10-27). "India Edge Closer To 100 Medals On Day Five". பார்க்கப்பட்ட நாள் 2023-11-01.
  4. "Asian Para Games: Sumit Antil breaks world record, leads India's 30-medal haul on Day 3". 2023-10-25. https://timesofindia.indiatimes.com/sports/asian-games-2023/india-asian-games/asian-para-games-sumit-antil-breaks-world-record-leads-indias-30-medal-haul-on-day-3/articleshow/104704237.cms?from=mdr. 
  5. 5.0 5.1 "Keralite Nimisha, Devender win gold at World Para Athletics GP". பார்க்கப்பட்ட நாள் 2023-11-01."Keralite Nimisha, Devender win gold at World Para Athletics GP". OnManorama. Retrieved 2023-11-01.
  6. "World Para Athletics Grand Prix: Devender, Nimisha win gold on opening day". பார்க்கப்பட்ட நாள் 2023-11-01.