நியம உவமையணி

நியம உவமை என்பது உவமையணி வகைகளுள் ஒன்றாகும். இன்னதற்கு இன்னதே உவமை எனத் தேற்றேகாரம் கொடுத்துக் கூறுவது நியம உவமையாகும். (நியமம்- நிச்சயம், உறுதிப்பாடு) சான்று:

தாதொன்று தாமரையே நின்முகம் ஒப்பது; மற்று
அறியாதொன்றும் ஒவ்வாது இளங்கொடியே - மீதுயர்ந்த
சேலே பணியப் புலியுயர்ந்த செம்பியர்க்கோன்
வேலே விழிக்கு நிகர்.

நின் முகத்துக்கு தாமரையே ஒப்பாகும் எனவும், விழிக்கு வேலே நிகர் எனவும் தேற்றேகாரம் கொடுத்து உவமையை நியமித்துக் கூறுவதால் இது நியம உவமையணி ஆகும்.

உசாத்துணை தொகு

தா.ம. வெள்ளைவாரணம் ,'தண்டியலங்காரம், திருப்பனந்தாள் மட வெளியீடு. 1968

"https://ta.wikipedia.org/w/index.php?title=நியம_உவமையணி&oldid=959103" இலிருந்து மீள்விக்கப்பட்டது