உவமை
உவமை (parable) என்பது ஒரு வாக்கியத்தில் வரும் ஒரு விடயத்தை மறைமுகமாக விளக்குதலுக்கு உதவுகிறது. ஒரு சிறப்பிக்கப்படும் பொருளை விளக்குவதற்காகவோ அழகுபடுத்துவதற்காகவோ பயன்படுத்துவர்.
எடுத்துக்காட்டாக மலர் போன்ற முகம் என்பதில் "மலர்" என்பது சிறப்புப் பொருள் - உவமானம். "முகம்" என்பது உவமானத்தால் சிறப்பிக்கப்படும் பொருள் உவமேயம்.
உவமைகள் பட்டியல்
தொகு- அச்சாணியற்ற தேர் போல - உயிர் நாடியற்றது.
- அத்தி பூத்தது போல - மிக அரிதாக
- ஆண்டிகள் மடம் கட்டியது போல - உருவாகாத திட்டம்
- ஆற்றில் கரைத்த புளி போல - பயனற்ற செயல்
- கீரியும் பாம்பும் போல - பகை
- உயிரும் உடம்பும் போல - ஒற்றுமை
- கரடி பிறை கண்டது போல - மிக அரிது
- உள்ளீடற்ற புதர் போல - போலி
- அடியற்ற மரம் போல - மூலபலமற்றது.
- கடன்பட்டார் நெஞ்சம் போல - மிகுதியான துன்பம்
- கண்ணுக்கு இமை போல - பாதுகாப்பு
- குரங்கின் கை பூமாலை போல - வீணடித்தல்
- எலியும் பூனையும் போல -பகை உணர்வு
- சிங்கத்தின் காதில் புகுந்த சிற்றெறும்பு போல - தொடர் மன உளைச்சல்
- சூரியனைக் கண்ட பனி போல - உடனடியாக விலகுதல்
- செத்து செத்து எழும் பீனிக்சு போல - உயிர்த்தெழுதல்
- புற்றீசல் போல - திடீர் பெருக்கம்
- பிணம் தின்ற பேய் போல -வேதனையிலும் வேதனை
- வலையில் அகப்பட்ட மான் போல - வசமாகச் சிக்குதல்
- நடுக்கடலில் விடப்பட்ட ஈழ அகதி போல - அச்ச உணர்வு
- வேலியே பயிரை மேய்ந்தது போல -இரண்டகம் (துரோகம்)
- பஞ்சும் தீயும் அருகில் இருந்தால் போல - விரைவாக உடன்படல்
- நாய் பெற்ற தெங்கம் பழம் - பயனில்லாமை
- செகுடன் காதில் சங்கு ஊதுவது போல - பயனற்றது
- ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் - உறுதிஇல்லாத தடுமாற்றம்
வெளி இணைப்புகள்
தொகு- முனைவர். மா.தியாகராசன் எழுதிய “குறுந்தொகையில் உவமை” கட்டுரை. பரணிடப்பட்டது 2011-01-17 at the வந்தவழி இயந்திரம்
நாட்டுப்புறவியல் இலக்கிய வடிவங்கள் | தொகு |
---|---|
பழமொழி | விடுகதை | உவமை | மரபுத்தொடர் | சொலவடை |