மரபுத்தொடர்

மரபுத் தொடர் என்பது நேர் பொருளையும் மறைப் பொருளையும் கொண்டிருக்கும்

ஒரு சொல் அல்லது சொற்றொடர், அதன் நேர்பொருளை உணர்த்தாமல் தொடரும் பயன்பாட்டில் வழிவழியாக வேறு குறிப்புப் பொருளினைத் தந்து நிற்கும்போது அவற்றை மரபுத்தொடர் அல்லது மொழி மரபு அல்லது மொழி வழக்கு அல்லது இலக்கணைத் தொடர் அல்லது சொலவடை என்பர். பிறர் அல்லது முன்னோர் ஒரு குறிப்பிட்ட தகவலை அல்லது கருத்தை தெரிவிக்கப் பயன்படுத்திய சொற்தொடரை வழிவந்தோரும் பயன்படுத்துவதால் மரபுத்தொடர் எனப் பெயர் பெற்றிருக்கலாம்.

பொதுவாக வழங்கும் தொடர்களும், வட்டாரம் தோறும் - சமூகம் தோறும் சிறுசிறு வேறுபாட்டுடன் வழங்கும் தொடர்களும் ஆக தமிழில் ஆயிரக் கணக்கான மரபுத் தொடர்கள் உள்ளன. ஆங்கிலத்தில் Idioms and Phrases என்று மரபுத் தொடர்களைச் சொல்கிறார்கள். அவற்றை Idioms என்ற ஒற்றைச் சொல்லால் குறித்தல் பொருந்தாது.[1]

மரபுத்தொடர் (சொற்தொடர் - விளக்கம்) தொகு

  • 'இறக்கைகட்டிப் பறக்கறது' - விரைவாக செல்வது, அல்லது விரைவாக இயங்குவது
  • 'கதைகட்டி விடுதல்' - தவறான ஒரு விடயத்தை ஏனையவர்களுக்கும் சொல்லி பரப்புதல்
  • 'பொட்டு வை' - கொலை செய்: நெற்றியில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லுதல்.
  • வெட்டு ஒன்று துண்டு இரண்டு - மிகவும் கண்டிப்பாக இருத்தல் அல்லது சொல்லுதல்
  • நாவை அடக்கு - அமைதியாக, எதுவும் பேசாமல் இருத்தல்
  • இறந்த மொழி - பேச்சு வழக்கில் இல்லாத, அல்லது பாவனையில் இல்லாத மொழி
  • மனப்பாரம் - மிகுந்த கவலை
  • நெஞ்சு உடைதல் / மனம் உடைதல் - மிதமிஞ்சிய விசனமடைதல்
  • மனதை உருக்கு - அனுதாபம் கொள்ளச் செய்
  • வாலைச் சுருட்டிக்கொண்டு போதல் / இருத்தல் - பயந்துபோய் எதுவும் சொல்லாமல் போதல் / இருத்தல்

மேற்கோள்கள் தொகு

நாட்டுப்புறவியல் இலக்கிய வடிவங்கள் தொகு
பழமொழி | விடுகதை | உவமை | மரபுத்தொடர் | சொலவடை
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரபுத்தொடர்&oldid=3566563" இருந்து மீள்விக்கப்பட்டது