நியாசு அசன் கான்
இந்திய அரசியல்வாதி
நியாசு அசன் கான் (Niyaz Hasan Khan) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1918-2007 ஆம் ஆண்டுகள் காலத்தில் இவர் வாழ்ந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவராகவும் உத்திரபிரதேசத்தில் உள்ள குந்தா சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.[1][2]
நியாசு அசன் கான் | |
---|---|
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர் | |
தொகுதி | குந்தா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 அக்டோபர் 1918 |
இறப்பு | 2007 |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
அரசியல் வாழ்க்கை
தொகுநியாசு அசன் கான் 1962 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டு வரையிலும், 1974 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரையிலும் , 1980 ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரையிலும் குந்தா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார் [3] குந்தா தொகுதியிலிருந்து 6 சட்டசபை தேர்தல்களில் வெற்றியும் மூன்று முறை தோல்வியும் அடைந்துள்ளார். நீண்ட காலமாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது, இடையில் உத்தரப் பிரதேச சட்டசபையின் சபாநாயகராகவும் இருந்துள்ளார். [4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Awasthi, Dilip (31 July 1987). "Lok Dal's split becomes convenient for Congress(I) in Uttar Pradesh". India Today. https://www.indiatoday.in/magazine/indiascope/story/19870731-lok-dal-split-becomes-convenient-for-congressi-in-uttar-pradesh-799121-1987-07-31. பார்த்த நாள்: 13 June 2018.
- ↑ Prashant Pandey (17 February 2012). "Raja to many but not Bhaiya to all". Express India. http://expressindia.indianexpress.com/story_print.php?storyId=913032. பார்த்த நாள்: 14 July 2014.
- ↑ "Sitting and previous MLAs from Kunda Assembly Constituency". Elections.in. http://www.elections.in/uttar-pradesh/assembly-constituencies/kunda.html.
- ↑ http://www.upvidhansabhaproceedings.gov.in/prev_speaker_niyaz-hasan