நியாஸ் தீவு

இந்தோனேசியாவின் வடக்குச் சுமாத்திரா மாகாணத்திலுள்ள ஒரு தீவு


'''நியாஸ் தீவு''' (Nias island) இந்தோனேசியா நாட்டின் சுமத்திரா தீவிற்கு மேற்கு பகுதியில் சங்கிலிதொடர் போன்று அமைந்த தீவுக்கூட்டத்தில் உள்ள ஒரு தீவாகும். நியாஸ் தீவின் மொத்த பரப்பளவு 5,121.30 சதுர கி.மீ.

நியாஸ் தீவு
இந்தோனேசியாவில் நியாஸ் தீவு இருப்பிடம்
புவியியல்
அமைவிடம்தென் கிழக்கு ஆசியா
ஆள்கூறுகள்1°6′N 97°32′E
நிர்வாகம்
இந்தோனேசியா
வடக்கு சுமத்ரா
மக்கள்
மக்கள்தொகை788,132 (2014 மதிப்பீடு)

இது வட சுமித்திரா மாகாணத்திற்கு உட்பட்டது. இதன் நிர்வாக பிரிவுகள்: நியாஸ் , தென் நியாஸ் , வட நியாஸ், மேற்கு நியாஸ் ஆகும். நியாஸ் தீவே வட சுமித்திரா மாகாணத்தில் உள்ள தீவுகளிலேயே பெரியதாகும்.

நியாஸ் தீவின் பெரிய நகரமாக குனுங்சிடோலி நகரம் இருக்கிறது. லோட்டு, லகோமி, டெலுக் டலம் போன்றவை பிற முக்கிய நகரங்களாகும்.

அலை சறுக்கு தொகு

நியாஸ் தீவு சர்வதேச அளவில் அலைசறுக்கு விளையாட்டிற்கு புகழ்பெற்ற இடமாகும். டெலுக் டலம் அருகேயுள்ள சோரக் பே என்ற இடம் சிறப்பானதாகும்.==

சுனாமி மற்றும் பூகம்பங்கள் 2004 மற்றும் 2005 தொகு

டிசம்பர் 26, 2004 இல், 2004 ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் , தீவின் வடக்கே சில கிலோமீட்டர் தூரத்தைத் தொட்டது, சுனாமிகள் 10 மீட்டர் (33 அடி) உயரமாக உருவாக்கின . 122 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் வீடில்லாதவர்களாக இருந்தனர்.

2005 ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி, 2004 நியாஸ்-சிமீலுலு பூகம்பத்தால் தீவு மீண்டும் பாதிக்கப்பட்டது.

[1]

  1. "nias island". https://en.tempo.co/read/562364/the-first-true-inhabitants-of-nias. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நியாஸ்_தீவு&oldid=3539221" இருந்து மீள்விக்கப்பட்டது