நியா இமாரா (Nia Imara) ஓர் அமெரிக்க வானியற்பியலாளரும் கலைஞரும் ஆவார். இவர் பெர்க்கேலி கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணியாவார்.

நியா இமாரா
Nia Imara
பணியிடங்கள்ஆர்வர்டு சுமித்சோனிய வானியற்பியல் மையம்
கல்வி கற்ற இடங்கள்கென்யான் கல்லூரி]]
கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்கேலி
ஆய்வேடுபெரியல் மூலக்கூற்று வளமங்களின் உருவாக்கமும் படிமலர்ச்சியும் (2010)
அறியப்படுவதுஅறிவியலும் கலையும்
இணையதளம்
http://www.niaimara.com

கல்வி

தொகு

இவர் சான்பிரான்சிசுகோ வளைகுடாப் பகுதியில் வளர்ந்தார்.[1] இவர் கென்யான் கல்லூரியில் சேர்ந்து கணிதவியலிலும் இயற்பியலிலும் இளவல் பட்டம் பெற்றார்.[1] இவர் பட்ட மேற்படிப்புக்காக பெர்க்கேலி கலிபோர்னியா பல்கலைக்கழகம் சென்றார். இவர் அங்கு 2010 இல் முனைவர் பட்டம் பெற்றார். அப்பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தை வானியற்பியலில் பெற்ற முதல் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணி இவரே ஆவார்.[1] இவரது முனைவர் பட்ட ஆய்வுரை பெருமூலக்கூற்று முகில்களின் உருவாக்கமும் படிமலர்ச்சியும் (The Formation and Evolution of Giant Molecular Clouds) என்பதாகும்.[2]

ஆராய்ச்சி

தொகு

ஆர்வார்டு பல்கலைக்கழகத்தின் வருங்காலப் புலத் தலைவர்கள் நிகழ்ச்சியின் முதல் முதுமுனைவர் பட்ட ஆய்வாளரானார்.[3] இவர் 2017 இல் ஆர்வார்டு சுமித்சோனிய வானியற்பியல் மையத்தில் ஜான் ஆர்வார்டு தகைமை அறிவியல் ஆய்வாளராக அமர்த்தப்பட்டார்.[4] இவர் பால்வெளிப் பொருண்மையையும் உருவாக்க வீதங்களையும் தூசு வெப்பநிலைகளையும் இணைக்கும் கணிதவியல் படிமத்தை உருவாக்கினார்.[5]

முனைவான கலை ஈடுபாடும் செயல்பாடும்

தொகு

இமாரா திரைச்சீலை நெய்வன ஓவியர்.[6] இவர் 2014 இல் முதல் காதல் எனும் சொந்தக் கலைக் காட்சியரங்கினைத் திறந்தார்.[7] இவர் ஓக்லாந்தில் 2015 இல் பல தொடர்கலைக்காட்சிகளை நடத்தி, அதனால் ஓக்லாந்துக் குடும்பங்களில் நிகழ்ந்த பாலினச் சமமை மேம்பாட்டை ஆய்வு செய்தார்.[8]


இவர் பாலின மேம்பாட்டுக்காகவும்[9] ஆண்-பெண் பொதுக் கல்விக்காகவும் பாடுபட்டவர்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Nia Imara sheds light on Oakland through art" (in en-US). Oakland North. https://oaklandnorth.net/2015/11/16/nia-imara-sheds-light-on-oakland-through-art/. 
  2. Nia, Imara, (2010). The Formation and Evolution of Giant Molecular Clouds (Thesis) (in ஆங்கிலம்). UC Berkeley.{{cite thesis}}: CS1 maint: extra punctuation (link) CS1 maint: multiple names: authors list (link)
  3. "Breakthrough Initiatives". breakthroughinitiatives.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-05-02.
  4. "Current Fellows" (in en). https://projects.iq.harvard.edu/jhdsfprogram/current-fellows. 
  5. Imara, Nia; Loeb, Abraham; Johnson, Benjamin D.; Conroy, Charlie; Behroozi, Peter (2018-02-08). "A Model Connecting Galaxy Masses, Star Formation Rates, and Dust Temperatures Across Cosmic Time". The Astrophysical Journal 854 (1): 36. doi:10.3847/1538-4357/aaa3f0. பன்னாட்டுத் தர தொடர் எண்:1538-4357. Bibcode: 2018ApJ...854...36I. 
  6. "NIA IMARA | ART". NIA IMARA | ART (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-05-02.
  7. "May 21st: On Being an Artist and Astronomer" (in en-US). 365 Days of Astronomy. 2015-05-21. https://cosmoquest.org/x/365daysofastronomy/2015/05/21/may-21st-on-being-an-artist-and-astronomer/. 
  8. "Oakland artist and astronomer to highlight impacts of gentrification" (in en-US). The Mercury News. 2015-11-06. https://www.mercurynews.com/2015/11/06/oakland-artist-and-astronomer-to-highlight-impacts-of-gentrification/. 
  9. Sokol, Joshua. "Why the Universe Needs More Black and Latino Astronomers" (in en). Smithsonian. https://www.smithsonianmag.com/science-nature/how-can-we-give-black-and-latino-astronomers-foundation-reach-stars-180960213/. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நியா_இமாரா&oldid=3960479" இலிருந்து மீள்விக்கப்பட்டது