நியுமான் – குவார்ட் மறுசீராக்கல்

நியுமான் – குவார்ட் மறுசீராக்கல் ( Newman–Kwart rearrangement) வினை என்பது ஆக்சிச-அரைல் தயோகார்பமேட்டு, ArOC(=S)NMe2 ஆக்சிசன் அணுவிலிருந்து கந்தக அணுவிற்கு இடம்பெயர்ந்து மறுசீரமைப்பு அடையும் வினை வகையாகும் [1][2][3]. வினையின் இறுதியில் கந்தக- அரைல் தயோகார்பமேட்டு, ArSC(=O)NMe2 உருவாகிறது. மெல்வின் சிபென்சர் நியுமான் [4] மற்றும் அரால்டு குவார்ட் [5] ஆகியோர் கண்டறிந்த காரணத்தால் இவ்வினை நியுமான் – குவார்ட் மறுசீராக்கல் வினை என்ற பெயரைப் பெற்றது.

தயோபீனால்களைத் தொகுப்பு முறையில் தயாரிப்பதற்கு உதவும் மிகமுக்கியமான வினையாக நியுமான் – குவார்ட் மறுசீராக்கல் வினை கருதப்படுகிறது. பீனால் (1) தாப்கோ என்ற சுருக்கப் பெயரால் அழைக்கப்படும் 1,4-டையாசாபைசைக்ளோ[2,2,2]ஆக்டேன் அல்லது சோடியம் ஐதரைடு தயோகார்பமைல் குளோரைடுடன் (2) வினைபுரிந்து ஆக்சிச-அரைல் தயோகார்பமேட்டு (3) உருவாகிறது. படி மூன்றில் உருவான ஆக்சிச-அரைல் தயோகார்பமேட்டை மேலும் 250 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்துவதால் நியுமான் – குவார்ட் மறுசீராக்கல் வினை நிகழ்ந்து கந்தக- அரைல் தயோகார்பமேட்டு (4) உருவாகிறது. காரம் நீராற்பகுப்பு அடைந்து அல்லது இதேபோன்ற ஒரு பிளவுக்கு உட்பட்டு ஒரு தயோபீனால் விளைகிறது [6]

.

வினைவழிமுறை

தொகு

நியுமான் – குவார்ட் மறுசீராக்கல் வினை ஒரு மூலக்கூற்றிடை வகை வினையாகும். நான்கு உறுப்பினர் வளைய மாற்ற நிலை வழியாக இவ்வினை நிகழ்கிறது.[3][6]

 

மேற்கோள்கள்

தொகு
  1. Zonta, C.; De Lucchi, O.; Volpicelli, R.; Cotarca, L. (2007). Thione–Thiol Rearrangement: Miyazaki–Newman–Kwart Rearrangement and Others. Topics in Current Chemistry. Vol. 275. Springer Berlin / Heidelberg. pp. 131–161. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/128_065. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-68099-4. பன்னாட்டுத் தர தொடர் எண் 0340-1022.
  2. Harvey, J. N.; Jover, J.; Lloyd-Jones, G. C.; Moseley, J. D.; Murray, P. M.; Renny, J. S. (2009). "The Newman–Kwart Rearrangement of O-Aryl Thiocarbamates: Substantial Reduction in Reaction Temperatures through Palladium Catalysis". Angew. Chem. Int. Ed. 48: 7612–7615. doi:10.1002/anie.200903908. பப்மெட்:19746383. 
  3. 3.0 3.1 Lloyd-Jones, G. C.; Moseley, J. D.; Renny, J. S. (2008). "Mechanism and Application of the Newman-Kwart O→S Rearrangement of O-Aryl Thiocarbamates". Synthesis 2008 (5): 661–689. doi:10.1055/s-2008-1032179. 
  4. Newman, M. S.; Karnes, H. A. (1966). "The Conversion of Phenols to Thiophenols via Dialkylthiocarbamates". J. Org. Chem. 31 (12): 3980–3984. doi:10.1021/jo01350a023. 
  5. Kwart, H.; Evans, E. R. (1966). "The Vapor Phase Rearrangement of Thioncarbonates and Thioncarbamates". J. Org. Chem. 31 (2): 410–413. doi:10.1021/jo01340a015. 
  6. 6.0 6.1 Burns, Matthew; Lloyd-Jones, G. C.; Moseley, J. D.; Renny, J. S. (2010). "The Molecularity of the Newman−Kwart Rearrangement". J. Org. Chem. 75 (19): 6347– 6353. doi:10.1021/jo1014382.