நியூட்டனின் மூன்றாம் விதி

நியூட்டனின் மூன்றாவது விதியானது "ஒவ்வொரு வினைக்கும் (action) அதற்கு இணையான எதிர் வினை உண்டு." கூறுகின்றது. ஐசாக் நியூட்டன் தான் 1687 ஆம் ஆண்டில் இலத்தீன் மொழியில் எழுதிய பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா[1] என்னும் நூலில் கீழ்க்காணுமாறு கூறுகிறார்:

நியூட்டனின் மூன்றாவது விதிக்கு ஓர் எடுத்துக்காட்டு: இருவர் பனியின் மீது ஸ்கேட் (சறுக்குக் கத்திக் காலணி) அணிந்து ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு அசையாது நிற்கும் காட்சி. ஒருவர் உந்தித் தள்ளும் விசைக்கு ஏற்ப மற்றவரும் சரிசமமாக எதிர் விசை தருதல்.

இலத்தீனில்: Lex III: Actioni contrariam semper et æqualem esse reactionem: sive corporum duorum actiones in se mutuo semper esse æquales et in partes contrarias dirigi.

தமிழில்: எல்லா விசைகளும் இரட்டையாக உள்ளன, அவ்விரு விசைகளும் அளவில் இணையாகவும், திசையில் எதிரெதிராகவும் இருக்கும்.

மேற்கண்ட நியூட்டனின் மூன்றாம் விதியானது மொத்த உந்தம் மாறா விதி என்பதில் இருந்து எழுவதாகும்.

உரை : ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர் வினை உண்டு.

நியூட்டனின் மூன்றாம் விதியைப் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை

தொகு
  • செயல் விசையும் எதிர்ச்செயல் விசையும் ஒரே பொருளின் மீது செலுத்தப்படுவது இல்லை; அவை செயலெதிர் செயலில் ஈடுபடும் இரு வெவ்வேறு பொருள்களின் மீது செலுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டுக்கு -- தரையின் மீது நாம் நிற்கையில் நம் எடை தரையின் மீது செலுத்தப்படும் செயல் விசை; இதற்குச் சமமான எதிர்ச்செயல் விசை தரை நம் மீது செலுத்தும் செங்குத்துத் தாங்கு விசை.
  • பொருள்களின் செயலெதிர் செயலினால் நிர்ணயிக்கப்படும் மெய்யான விசைகளைப் பொருத்தவரையில் தான் இவ்விதி மெய்யானதேயன்றி, அவ்விசைகளின் தொகுவிசைக்கு அன்று.
  • செயல் விசையும் எதிர்ச்செயல் விசையும் வெவ்வேறு பொருட்களில் செயல்படுவதால் ஒன்றையொன்று அழிப்பதில்லை.
  • செயல் விசைக்கும் எதிர்ச்செயல் விசைக்கும் இடையே நேர இடைவேளை கிடையாது , இவ்விரு விசைகளும் ஒரே நேரத்தில் செயல்படும் .

இவற்றையும் பார்க்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. நூலின் முழுப்பெயர்: Philosophiae Naturalis Principia Mathematica, 1687