நியூட்டன் (திரைப்படம்)

அமித் மாசுர்கார் இயக்கிய 2017 ஆண்டு திரைப்படம்

நியூட்டன் (Newton ) என்பது 2017 ஆண்டைய இந்தித் திரைப்படமாகும். இப்படத்தை உடன் எழுதி இயக்கியவர் அமித் வி. மசார்கார்.[2][3] இப்படத்தின் நட்சத்திரங்கள் தேசிய விருது பெற்ற ராஜ்குமார் ராவ், பங்கஜ் திரிபாதி, அஞ்சலி பாட்டீல், ரகுபிர் யாதவ் ஆகியோராவர்.

நியூட்டன்
Newton
இயக்கம்அமித் மசார்கார்
தயாரிப்புமனிஷ் முந்த்ரா
கதைஅமித் வி. மசார்கார்
திரைக்கதைஅமித் வி. மசார்கார்
மயக் திவாரி
இசைநரேன் சந்தவார்கர் & பெனடிக்ட் டெய்லர்
நடிப்புராஜ்குமாரர் ராவ்
பங்கஜ் திரிபாதி
அஞ்சலி பாட்டீல்
ரகுபிர் யாதவ
ஒளிப்பதிவுஸ்வப்னில் சொனாவேன்
படத்தொகுப்புஸ்வெட்டா வெங்கட் மேத்யூ
கலையகம்டிரிஷியம் பிலிம்ஸ்
விநியோகம்ஈரோஸ் இண்டர்நேஷனல்
வெளியீடு22 செப்டம்பர் 2017 (2017-09-22)
ஓட்டம்106 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிஇந்தி
மொத்த வருவாய்13.26 crore[1]

இப்படத்தை டிரிஷியம் பிலிம்ஸ் நிறுவனத்தின் மனிஷ் முந்த்ரா தயாரித்துள்ளார். அமித் மசார்கார் இயக்கிய இரண்டாவது படம் இது.[4] அவரது முதல்படம் 2013 ஆம் ஆண்டில் வெளியான படமான சுலேமணி கீதாவுக்கு ஆகும்.[5]

நியூட்டன் திரைப்பமானது 67 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது, மற்றும் வட அமெரிக்க டிரிபேகா திரைப்பட விழாவில் சர்வதேச சர்வதேச கதைப் போட்டித் தொடரில் திரையிடப்பட்டது. மேலும் இது 90 வது அகாடமி விருதுகளில் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான போட்டிக்கு இந்தியாவின் சார்பில் போட்டியிட தேர்ந்தெடுக்கப்பட்டது.[6]

கதை தொகு

தேர்தலுக்காக பழங்குடி மக்களிடையே, ‘உங்களுக்கு மடிக்கணிணியும், செல்பேசியும் தருகிறோம்’ என்று பரப்புரை செய்து வாக்கு சேகரிக்க வரும் பழங்குடி அரசியல் தலைவர் ஒருவரை மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்வதிலிருந்து இந்தப் படம் தொடங்குகிறது.

கதையின் முதன்மைக் கதாபாத்திரமான நுட்டன் குமார். நண்பர்கள், உறவினர்கள் போன்றோரின் கிண்டலின் காரணமாக, தனது பெயரை நியூட்டன் என்று மாற்றிக்கொள்கிறான். இந்த மத்திய தர இளைஞனுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் வேலை பார்கிறான். சரியான நேரத்துக்கு அலுவலகம் வந்து சரியான நேரத்துக்கு புறப்படும் பொறுப்புமிக்க அரசு ஊழியன். ‘எதையாவது மாற்றாத வரை, எதுவுமே மாறாது’ என்ற விஞ்ஞானி நியூட்டனின் தத்துவத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பவன்.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் பணிக்காக சத்தீஸ்கர் மாநிலத்துக்கு அனுப்பப்படுகிறான். இது அவனுடைய வாழ்க்கையையும், இந்த நாட்டையும் புரிந்துகொள்ள நாடாளுமன்றத் தேர்தல் பணி அமைகிறது. சுரங்க நிறுவனங்களின் சுரண்டல், மாவோயிஸ்ட்டுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் மாட்டிக் கொண்டு திண்டாடுதல், வறுமை, கல்வி, மருத்துவம், சாலை போன்ற அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாதது உள்ளிட்ட காரணங்களால், மத்திய, மாநில அரசுகளின் மீது அங்குள்ள பழங்குடிகள் நம்பிக்கை அற்று உள்ளனர். எனவே, அவர்களுக்குத் தேர்தல் மீதும் நம்பிக்கை இல்லை.

இதைப் புரிந்துகொள்ளாத நியூட்டன், எப்படியும் தேர்தலை, விதிமுறைப்படி நடத்தியே ஆக வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறான். அந்தப் பிடிவாதம் அவனுக்கு வெற்றியைத் தந்ததா, இல்லையா என்பது மீதிப் படம். எல்லாச் சட்டங்களையும் வைத்துக்கொண்டு, எதையும் சரிவரப் பின்பற்றாத ஒரு அமைப்பில், ஒருவர் மட்டும் நேர்மையாக இருந்து என்ன செய்ய முடியும் என்ற கேள்வியை இந்தப் படம் எழுப்புகிறது. ஆனால், நேர்மையாக இருப்பதன் மூலம் ஒரு சிறிய மாற்றத்தையாவது நிகழ்த்திவிட முடியும் என்ற நம்பிக்கையையும் இந்தப் படம் உருவாக்குகிறது.

வரவேற்பு தொகு

நியூட்டன் திரைப்படம் பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு வரவேற்பை பெற்றது.[7] மேலும் இது கருத்துக்களப் பிரிவ்வில் சிறந்த படத்திற்கான சிஐசிஏஇ விருதையும் வென்றது. கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ்சின், ஹாலிவுட்டில் உள்ள டால்பி அரங்கில் 2018 மார்ச் 4 அன்று நடைபெறும் 90 வது அகாடமி விருதுகளுக்காக இந்தியாவின் அதிகாரப்பூர்வமாக இது நுழைகிறது.[8][9] நியூட்டன் படமானது இந்திய ஒன்றிய அரசிடமிருந்து ஒரு கோடி ரூபாய் மானியம் பெறும் முதல் இந்திய திரைப்படமாகும்.[10]

வெளியீடு தொகு

நியூட்டன் திரைப்படமானது 2017 செப்டம்பர் 22 அன்று இந்தியாவில் 350 அரங்குகளில் திரையிடப்பட்டது.[11][12]

விருதுகள் தொகு

ஆண்டு விருது வகை முடிவு
2017 பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழா கலைப் படத்துக்கான சர்வதேச சம்மேளன (CICAE) விருது[13] வெற்றி
2017 ஆங்காங் பண்ணாட்டு திரைப்பட விழா
சிறந்த படம்[14] வெற்றி

மேற்கோள்கள் தொகு

 1. http://www.bollywoodhungama.com/news/box-office-special-features/box-office-india-collections-day-wise-break-newton/
 2. "'Newton': Berlin Review" (in en). http://www.screendaily.com/reviews/newton-berlin-review/5114642.article. 
 3. Huffington Post
 4. "Newton movie review: Rajkummar Rao, Pankaj Tripathi, Anjali Patil shine in a dazzlingly low-key dramedy".
 5. "Deccan Chronicle" (in en). http://www.deccanchronicle.com/. 12 February 2017. http://www.deccanchronicle.com/entertainment/bollywood/120217/rajkummars-newton-opens-to-thunderous-response-at-berlin-international-film-festival.html. External link in |work= (help)
 6. "'Newton' is India's official entry to Oscars 2018". Times of India. 22 September 2017. http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/newton-is-indias-official-entry-to-oscars-2018/articleshow/60792920.cms. 
 7. "Rajkummar Rao-starrer Newton wins Art Cinema honour at Berlinale". http://indiatoday.intoday.in/story/newton-wins-art-cinema-honour-at-berlinale/1/886270.html. 
 8. http://www.hindustantimes.com/bollywood/rajkummar-rao-s-newton-selected-as-india-s-official-entry-to-the-oscars/story-sKAJdo1dUi7GL4kQTjTfoK.html
 9. "Is Newton Plagiarised From Iranian Film Secret Ballot?" இம் மூலத்தில் இருந்து 25 செப்டம்பர் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170925132205/https://textsens.com/blog/is-rajkummar-raos-newton-inspired-from-secret-ballot. 
 10. "India's Oscar entry 'Newton' to get Rs 1 crore grant from Centre".
 11. http://aajtak.intoday.in/story/rajkumar-rao-newton-nominated-for-oscar-releases-tmov-1-953949.html
 12. http://www.boxofficeindia.com/report-details.php?articleid=3265
 13. "Berlinale 2017: Rajkummar Rao's Newton wins big at the film festival" (in en-US). Firstpost. 2017-02-20. http://www.firstpost.com/entertainment/berlinale-2017-rajkummar-raos-newton-wins-big-at-the-film-festival-3291826.html. 
 14. Hungama, Bollywood (2017-04-24). "Rajkummar Rao's Newton wins ‘Best Film’ award at Hong Kong International Film Festival - Bollywood Hungama" (in en-US). Bollywood Hungama. http://www.bollywoodhungama.com/news/bollywood/rajkummar-raos-newton-wins-best-film-award-hong-kong-international-film-festival/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நியூட்டன்_(திரைப்படம்)&oldid=3671760" இலிருந்து மீள்விக்கப்பட்டது